மீண்டும் பிரசாந்த் கிஷோர் உதவியை நாடிய பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்.. முதன்மை ஆலோசகராக நியமனம்

மீண்டும் பிரசாந்த் கிஷோர் உதவியை நாடிய பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்.. முதன்மை ஆலோசகராக நியமனம்

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தனது முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமனம் செய்துள்ளதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் யுக்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பல அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு பின்புலமாக இருந்தவர். 2014ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடிக்க பிரசாந்த் கிஷோரும் ஒரு காரணம். தமிழகத்தில் தி.மு.க.வுக்காக பிரசாந்த் கிஷோர் தேர்தல் யுக்திகளை வகுத்து வருகிறார். மேலும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காகவும் பணியாற்றி வருகிறார்.

மீண்டும் பிரசாந்த் கிஷோர் உதவியை நாடிய பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்.. முதன்மை ஆலோசகராக நியமனம்
பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்

இந்த சூழ்நிலையில், பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தனது அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமனம் செய்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், என்னுடைய தலைமை ஆலோசகராக என்னுடன் பிரசாந்த் கிஷோர் இணைந்துள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. பஞ்சாப் மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயல்பட எதிர்நோக்குகிறேன் என்று பதிவு செய்து இருந்தார்.

மீண்டும் பிரசாந்த் கிஷோர் உதவியை நாடிய பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்.. முதன்மை ஆலோசகராக நியமனம்
காங்கிரஸ்

பஞ்சாபில் அடுத்த ஆண்டு அம்மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரசாந்த் கிஷோரை கேப்டன் அமரீந்தர் சிங் தனது அரசியல் ஆலோசகராக நியமனம் செய்து இருப்பது பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. பிரசாந்த் கிஷோர் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்குடன் இணைவது இது முதல் முறையல்ல. 2017ம் ஆண்டில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் யுக்திகளை பிரசாந்த் கிஷோர் வகுத்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது குறிப்பிடத்தக்கது.