சீன எல்லையில் வீரத்தை காட்டுமா ஆர்.எஸ்.எஸ்? – மோகன் பகவத்துக்கு பிரஷாந்த் பூஷன் கேள்வி

சீன எல்லையில் வீரத்தை காட்டுமா ஆர்.எஸ்.எஸ்? – மோகன் பகவத்துக்கு பிரஷாந்த் பூஷன் கேள்வி

இந்திய ராணுவத்தை விட வலிமையான ராணுவம் என்று ஆர்.எஸ்.எஸ்-ஐ அந்த அமைப்பினர் கூறுகின்றனர். இந்தியா – சீனா போர் பதற்றம் உள்ள நிலையில், மூன்றே நாளில் சீன எல்லை சென்று தன்னுடைய வீரத்தை காட்டுமா ஆர்.எஸ்.எஸ் என்று மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீன எல்லையில் வீரத்தை காட்டுமா ஆர்.எஸ்.எஸ்? – மோகன் பகவத்துக்கு பிரஷாந்த் பூஷன் கேள்வி

http://

சீன எல்லையில் வீரத்தை காட்டுமா ஆர்.எஸ்.எஸ்? – மோகன் பகவத்துக்கு பிரஷாந்த் பூஷன் கேள்விசில ஆண்டுகளுக்கு முன்பு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “ராணுவம் போருக்குத் தயாராக ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை ஆகும். ஆனால் நாங்கள் (ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்) போருக்கு மூன்றே நாளில் தயாராகிவிடுவோம்” என்று கூறியிருந்தார். இந்த செய்தியை தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், “இந்தியாவின் லடாக் பகுதியில் சீன எல்லைக்கு மூன்றே நாளில் சென்று தன்னுடைய வீரத்தைக் காட்டுமா ஆர்.எஸ்.எஸ்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.