ஐபேக்கில் ஸ்டாலின் என்ட்ரி… மாஸ் பாடலுடன் வரவேற்று ரிப்போர்ட் கொடுத்த பிகே!

 

ஐபேக்கில் ஸ்டாலின் என்ட்ரி… மாஸ் பாடலுடன் வரவேற்று ரிப்போர்ட் கொடுத்த பிகே!

சமீபத்தில் தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்தது. எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாத தேர்தலாகவே இம்முறை நடைபெற்ற தேர்தல் இருந்திருக்கிறது. அதிமுகவுக்காக சுனில் கனுகோலு வேலை செய்ய, திமுகவுக்கு அவரின் குருவான பிரசாந்த் கிஷோர் தேர்தல் பிரச்சார உத்திகளை வகுத்துக் கொடுத்திருந்தார். 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்காக தனது பணியைத் தொடங்கியவர் பிகே. அதன்பின் கெஜ்ரிவால், மம்தா என வெற்றிபெறும் குதிரைகளின் மேல் பந்தயம் கட்டினார்.

ஐபேக்கில் ஸ்டாலின் என்ட்ரி… மாஸ் பாடலுடன் வரவேற்று ரிப்போர்ட் கொடுத்த பிகே!

தமிழகத்துக்குள் கமல்ஹாசனின் மூலம் என்ட்ரி கொடுத்தார். 2019 மக்களவை தேர்தலில் மநீம கட்சிக்காக தேர்தல் பணியாற்றி கணிசமான வாக்கு வங்கியையும் பெற்றுக்கொடுத்தார். இச்சமயத்தில் திமுகவிடம் பணியாற்றி சுனில் கனுகோலு ஒப்பந்ததை முறித்துக்கொள்ள பிகே அங்கே துண்டை விரித்தார். இது திமுகவுக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. அதையெல்லாம் மீறி பிகேவுடன் ஸ்டாலின் ஒப்பந்தம் போட்டார். அதன்படி தேர்தலுக்கான அனைத்துக் கட்சிப் பணிகள், பிரச்சார உத்திகள் என அனைத்தும் பிகேவின் கைவண்ணம் தான். அந்தளவிற்கு பிகேவை நம்பினார் ஸ்டாலின்.

ஐபேக்கில் ஸ்டாலின் என்ட்ரி… மாஸ் பாடலுடன் வரவேற்று ரிப்போர்ட் கொடுத்த பிகே!

இதன் வெளிப்பாடாகவே வாக்குப்பதிவு நடைபெற்ற அன்றைய தினம் தேனாம்பேட்டையிலுள்ள ஐபேக் அலுவலகத்துக்கு திடீர் விசிட் அடித்தார். கள நிலவரம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும், பிகேவுடன் ஆலோசனை மேற்கொள்ளவும் விசிட் அடித்தார். ஸ்டாலின் வருகிறார் என்று முன்கூட்டியே அறிந்துகொண்ட ஐபேக் டீம் அவசர அவசரமாக அவரை வரவேற்க ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தனர். சரியாக அவர் அலுவலகத்துக்குள் நுழைய, ஸ்டாலின் தான் வர்றாரு… விடியல் தர போறாரு பாடலை ஒலிக்கவிட்டனர். குழுவினர் அனைவரும் கை தட்டி, விசில் அடித்து அவரை வரவேற்றார்கள்.

இந்தப் பாடலை ஒலிக்கவிட்டதன் மூலம் ஸ்டாலினுக்குச் சாதகமாகக் கள நிலவரம் இருப்பதை மறைமுகமாக பிகே உணர்த்தியிருக்கிறார் என உடன்பிறப்புகள் சிலாகிக்கின்றனர். அதற்கேற்றவாறே பிகேவும் இறுதி கள நிலவரத்தைக் கொடுத்திருக்கிறார். தேர்தலுக்கு முன்பு 170க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிவாகை சூடும் என்று கொடுத்திருந்தார். தற்போது அதையும் தாண்டி நெருக்கிப் பிடித்து 200 இடங்களை திமுக வெல்லும் என ரிப்போர்ட் கொடுத்திருக்கிறாராம் பிகே. இதனால் குஷியான ஸ்டாலின் வேட்பாளர்கள் பலருக்கும் போன் செய்து வாழ்த்துகள் கூறியிருக்கிறாராம். அவர்களும் பதிலுக்கு நீங்க தான் தலைவரே அடுத்த முதல்வரு என்று பாராட்டி தள்ளிவிட்டார்களாம்!