மம்தா பானர்ஜிக்கு ஒரே சவால் பா.ஜ.க.தான்…. உண்மையை ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர்…

 

மம்தா பானர்ஜிக்கு ஒரே சவால் பா.ஜ.க.தான்…. உண்மையை ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர்…

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு ஒரே சவாலாக பா.ஜ.க. உருவெடுத்துள்ளது என்பதை அந்த கட்சியின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அடுத்த நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக தேர்தல் வியூகங்கள் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரை நியமனம் செய்துள்ளார். பிரசாந்த் கிஷோர் முன்னணி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: உள்துறை அமைச்சர் அடிக்கடி மாநில தேர்தல்களில் நடப்புக்கு மாறான கூற்றுக்களை கூறுகிறார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருப்பார் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மம்தா பானர்ஜிக்கு ஒரே சவால் பா.ஜ.க.தான்…. உண்மையை ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர்…
பிரசாந்த் கிஷோர்

ஆனால் உண்மை நமக்கு தெரியும். மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் ஜார்க்கண்ட் மாநில தேர்தல்களில் பா.ஜ.க. சிறப்பாக செயல்படவில்லை. எதிர்வரும் மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தை கடக்க போராடும் என்று நான் நம்புகிறேன். எனது நம்பிக்கைதான் கணிப்பை ஏற்படுத்த வழிவகுத்தது. மேற்கு வங்கத்துக்கு எப்பவாவது வருகை தருபவர்கள் (அமித் ஷா, ஜே.பி. நட்டா) தாங்கள் வெற்றி பெறும் இடங்களை பற்றி கணிக்க முடியாது. அவர்களில் சிலருக்கு மேற்கு வங்கத்தின் மாவட்டங்களின் பெயர் கூட தெரியாது.

மம்தா பானர்ஜிக்கு ஒரே சவால் பா.ஜ.க.தான்…. உண்மையை ஒப்புக்கொண்ட பிரசாந்த் கிஷோர்…
அமித் ஷா, ஜே.பி.நட்டா

பா.ஜ.க. 100க்கு இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் நான் செய்து வரும் வேலையை விட்டு விடுகிறேன். பா.ஜ.க. 99 அல்லது 100 இடங்களை கடப்பது கடினம் என்பதை நிரூபிக்க என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. பா.ஜ.க. மேற்கு வங்கத்தில் 70 சதவீத வாக்காளர்களை மட்டுமே சென்றவதை நோக்கமாக கொண்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு எதிர்ப்பு உள்ளது. ஆனால் மாநில மக்கள் மம்தாவுக்கு வாக்களிக்கின்றனர். எதிர்வரும் தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு இடையிலானதாக இருக்கும். அரசியலில் லட்சியமாக இருப்பது நல்லது. கட்சியை விட்டு எவராலும் கட்சிக்கு பின்னடைவுதான். மம்தா பானர்ஜி சொல்வது சரியா அல்லது சுவேந்து ஆதிகாரி சொல்வது சரியா என்பதை வாக்காளர்கள் தீர்மானிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.