மார்ச் மாத மின் கட்டணம் செலுத்ததாது உண்மைதான்; முழு தொகையையும் இன்று காலை செலுத்திவிட்டேன் – பிரசன்னா

 

மார்ச் மாத மின் கட்டணம் செலுத்ததாது உண்மைதான்; முழு தொகையையும் இன்று காலை செலுத்திவிட்டேன் – பிரசன்னா

நடிகர் பிரசன்னா, “தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB கொரோனா லாக்டவுனில் கொள்ளை அடிக்கிறது என எத்தனை பேர் நினைக்கிறீர்கள்?” என ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மாதம் தந்தை, மாமனார் மற்றும் தன்னுடைய வீட்டிற்கு சேர்த்து ரூ.70,000 க்கு மேல் மின்சார கட்டணம் செலுத்தியதாகவும், இது ஜனவரி மாதத்தை காட்டிலும் பல மடங்கு உயர்ந்துள்ளது” தெரிவித்தார். நடிகர் பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு மின்வாரியம் பதில் அளித்துள்ளது.  அதில், வழக்கமான நடைமுறையின்படி, 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அணுகி தெளிவு பெறலாம். 4 மாத மின் நுகர்வு இரண்டு மாதங்களாக பிரிக்கப்பட்டு அதன்படி மின் கட்டணம் கணக்கீடப்படுகிறது. முந்தைய மாத கட்டணம் கழிக்கப்பட்டதும் மின் கட்டண தொகை கணக்கிடப்படுகிறது. மேலும் மார்ச் மாதத்திற்கான மின் கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை என்றும் மின்வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது.

மார்ச் மாத மின் கட்டணம் செலுத்ததாது உண்மைதான்; முழு தொகையையும் இன்று காலை செலுத்திவிட்டேன் – பிரசன்னா

இந்நிலையில் நடிகர் பிரசன்னா வெளியிட்டுள்ள அறிக்கையில், “உண்மைதான்! ரீடிங் எடுப்பதிலிருந்து 10 நாட்களுக்குள் பொதுவாக கட்டணம் செலுத்தும் பழக்கமுள்ள நான், மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால் கட்டணம் செலுத்த தவறியது உண்மைதான், அதே அளவு இதற்கு முன் காலதாமதமின்றி தவறாமல் கட்டணம் செலுத்திவருகிறேன் என்பதும் உண்மை. வாரியம் சொல்வடு போல் நான்கு மாத கணக்கீட்டாலும் மார்ச் மாத கட்டணம் சேர்த்ததும் எனக்கு தனிப்பட்ட கட்டணம் கூடுதலாக வந்திருக்கலாம். என் தனிபட்ட பிரச்னையாக இதை நான் எழுப்பவில்லை. அதிக தொகை கட்டணமாக வந்திருப்பதாக எவ்வளவு பேர் நினைக்கிறார்களென்று அறிந்துகொள்ளவே என் ட்வீட். மின்வாரியத்தை குறை சொல்வதோ குற்றஞ்சாட்டுவதோ என் நோக்கமல்ல. பொதுவாக எல்லோருக்கும் வந்திருப்பதாக சொல்லப்படும் அதிக கட்டணம் குறித்த கவன ஈர்ப்பும், அதன்மூலம் வாரியமோ அரசோ இந்த இக்கட்டான சூழலில் ஏதாவது முறையில் இப்பிரச்னையில் மக்களுக்கு ஒரு தளர்வோ கட்டணம் செலுத்த தவணை அல்லது கால அவகாசமோ தருமாயின் மிக்க உதவியாக இருக்கும் என்பதே என் வேண்டுகோள். நேற்றய தொலைக்காட்சி உறையாடலிலும் அதையே நான் குறிப்பிட்டிருந்தேன். மற்றபடி வாரியத்தையோ அரசையோ குறைகூறுவதற்கான உள்நோக்கமில்லை. மக்கள் மீது வீழ்ந்திருக்கும் இந்த எதிர்பாரா சுமையை வாரியமும் அரசும் இறக்கிவைக்குமென எதிர்பார்க்கிறேன்.

மார்ச் மாத மின் கட்டணம் செலுத்ததாது உண்மைதான்; முழு தொகையையும் இன்று காலை செலுத்திவிட்டேன் – பிரசன்னா

பி கு: என் வீட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட முழு தொகையும் எந்த நிலுவையுமின்றி இன்று காலை நான் செலுத்திவிட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.