பிரணாப் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை… இன்றும் ராணுவ மருத்துவமனை அறிக்கை!

 

பிரணாப் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை… இன்றும் ராணுவ மருத்துவமனை அறிக்கை!


பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று இன்றும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து 18வது நாளாக கோமாவில் உள்ளார். உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி அவருக்கு மூளையில்

பிரணாப் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை… இன்றும் ராணுவ மருத்துவமனை அறிக்கை!

அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதனுடன் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதியானது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவர் கண்விழிக்கவில்லை. ஆழ்நிலை கோமாவுக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்நிலை கோமாவுக்கு சென்றவர்கள் மீண்டு வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் மூளைச்சாவு என்ற நிலையையும் அவர் அடையவில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதால் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

பிரணாப் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை… இன்றும் ராணுவ மருத்துவமனை அறிக்கை!


இன்று டெல்லி ஆர்மி ரிசர்ச் அன்ட் ரெஃபரல் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து ஐ.சி.யு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய நுரையீரல் நோய்த் தொற்று மற்றும் சிறுநீரக செயல்திறன் குறைவுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் ஆழ்நிலை கோமாவில் உள்ளார். வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளார். அவரது ரத்த ஓட்டம் உடல் உள் உறுப்புகளின் செயல்பாடு இயல்பாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.