சிறுநீரகம் செயலிழக்கத் தொடங்கியுள்ளன… பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் மேலும் பின்னடைவு

சிறுநீரகம் செயலிழக்கத் தொடங்கியுள்ளன… பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் மேலும் பின்னடைவு

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்திறன் குறையத் தொடங்கியுள்ளது என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சிறுநீரகம் செயலிழக்கத் தொடங்கியுள்ளன… பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் மேலும் பின்னடைவு

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 10ம் தேதி மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்து வந்தனர். ஆனால், அவரது உள் உறுப்புகள் இயல்பாக செயல்படுகின்றன என்று கூறி வந்தனர்.

சிறுநீரகம் செயலிழக்கத் தொடங்கியுள்ளன… பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் மேலும் பின்னடைவு

இந்த நிலையில் டெல்லி ஆர்மி ரிசர்ச் அன்ட் ரெஃபரல் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாடு நேற்றிலிருந்து குறையத் தொடங்கியுள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளது. ஏற்கனவே, அவரது நுரையீரலில் நோய்த் தொற்று அதிகரித்துள்ள நிலையில், சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்திருப்பது நிலைமையை மோசமாக்கியுள்ளது.