பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் மேலும் ஒரு பின்னடைவு – டெல்லி மருத்துவமனை தகவல்!

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் மேலும் ஒரு பின்னடைவு – டெல்லி மருத்துவமனை தகவல்!

பிரணாப் முகர்ஜி உடல்நிலை மேலும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் மேலும் ஒரு பின்னடைவு – டெல்லி மருத்துவமனை தகவல்!

பிரணாப் முகர்ஜி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கோமா நிலையில் உள்ளார். அவரது சிறுநீரகம் செயலிழக்கத் தொடங்கிய நிலையில் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய நுரையீரலில் நோய்த் தொற்று அதிகமாக உள்ளதால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் மேலும் ஒரு பின்னடைவு – டெல்லி மருத்துவமனை தகவல்!

இந்த நிலையில் அவருக்கு செப்டிக் ஷாக் எனப்படும் தொற்றுக் கிருமிகள் ரத்தத்தில் கலக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லி ஆர்மி ரிசர்ச் அன்ட் ரெஃபரல் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்றில் இருந்து பிரணாப் முகர்ஜி உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் மேலும் ஒரு பின்னடைவு – டெல்லி மருத்துவமனை தகவல்!

அவரது நுரையீரலில் ஏற்பட்ட நோய்த் தொற்று காரணமாக செப்டிக் ஷாக் என்ற நிலை உருவாகி உள்ளது. இதற்கான சிகிச்சையை நிபுணர்கள் குழு அளித்து வருகிறது. அவர் ஆழ்நிலை கோமாவில் உள்ளார். தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் அவர் வைக்கப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
பொதுவாக செப்டிக் ஷாக் நிலை வந்தால் நோய்த் தொற்று உடல் முழுவதும் பரவி ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்க ஆரம்பிக்கும். கடைசியில் உயிரிழப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.