முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

 

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

பிரணாப் முகர்ஜி காலமானதாக டெல்லி ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.

பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 10ம் தேதி மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதில் இருந்து அவர் கண்விழிக்கவில்லை. கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டார். அதன்படி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கோமா நிலையில் இருந்தார். அவரது சிறுநீரகம் செயலிழக்கத் தொடங்கிய நிலையில் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய நுரையீரலில் நோய்த் தொற்று அதிகமாக உள்ளதால் அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

இதனிடையே அவருக்கு செப்டிக் ஷாக் எனப்படும் தொற்றுக் கிருமிகள் ரத்தத்தில் கலக்கும் பிரச்னையும் ஏற்பட்டது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட போது பிரணாப் முகர்ஜி ஆழ்நிலை கோமாவிற்கு சென்றார். தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை தொடர்ந்தது. செப்டிக் ஷாக் நிலை வந்தால் நோய்த் தொற்று உடல் முழுவதும் பரவி ஒவ்வொரு உறுப்பாக செயலிழக்க ஆரம்பிக்கும். கடைசியில் உயிரிழப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் 84 வயதான குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானதாக டெல்லி ராணுவ மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.