“சென்னையில் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு”

 

“சென்னையில் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு”

வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ், “கொரோனா 2ம் அலை காரணமாக, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சென்னையில் 3 மடங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையில் 20% அளவிற்கு பரிசோதனையின்போது பாசிட்டிவ் ஏற்படுகிறது. வரப்போகும் காலத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 13% பேருக்கு மூச்சுத்திணறல், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, உயர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

“சென்னையில் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு”

ஒவ்வொரு மாநிலத்திலும் போர்க்கால அடிப்படையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகிறது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து மாஸ்க் அணியவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும். வீட்டில் தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகளை முற்றிலும் தடுப்பதற்காக அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனக் கூறினார்.