கொடுத்த தடுப்பூசிகளையே இன்னும் போடவில்லை.. ஆனால் இன்னும் கேட்கிறாங்க.. தாக்கரே அரசை தாக்கிய பா.ஜ.க.

கொடுத்த தடுப்பூசிகளையே இன்னும் போடவில்லை.. ஆனால் இன்னும் கேட்கிறாங்க.. தாக்கரே அரசை தாக்கிய பா.ஜ.க.

மகாராஷ்டிராவுக்கு அனுப்பிய தடுப்பூசிகளில் இன்னும் சுமார் 20 லட்சம் தடுப்பூசிகள் போடவில்லை ஆனால் கூடுதலாக தடுப்பூசி கேட்கிறார்கள் என்று உத்தவ் தாக்கரே அரசை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தாக்கினார்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளையில் தற்போது நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் 2வது அலை தொடங்கியுள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

கொடுத்த தடுப்பூசிகளையே இன்னும் போடவில்லை.. ஆனால் இன்னும் கேட்கிறாங்க.. தாக்கரே அரசை தாக்கிய பா.ஜ.க.
பிரகாஷ் ஜவடேகர்

இந்த சூழ்நிலையில் சிவ சேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான பிரியங்கா சதுர்வேதி டிவிட்டரில், இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளுக்கு இந்தியர்களுக்கு சமமான அணுகல் இருக்கக்கூடாது? என்று பதிவு செய்து இருந்தார். இதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலடி கொடுத்துள்ளார்.

கொடுத்த தடுப்பூசிகளையே இன்னும் போடவில்லை.. ஆனால் இன்னும் கேட்கிறாங்க.. தாக்கரே அரசை தாக்கிய பா.ஜ.க.
பிரியங்கா சதுர்வேதி

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டிவிட்டரில், மார்ச் 12ம் தேதி வரை மகாராஷ்டிராவுக்கு மொத்தம் 54 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டது. ஆனால் அதில் 23 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 56 சதவீத தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில், இப்போது சிவ சேனா எம்.பி. மாநிலத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை கேட்கிறார். முதலில் தொற்றுநோய் பரவலின் தவறான மேலாண்மை, தற்போது தடுப்பூசி போடுவதில் மோசமாக நிர்வாகம் என பதிவு செய்து இருந்தார்.