கொள்ளையடிப்பதை தவிர்த்து உங்க அரசின் குறைந்தபட்ச திட்டம் என்ன?.. சிவ சேனாவை கலாய்க்கும் பா.ஜ.க.

கொள்ளையடிப்பதை தவிர்த்து உங்க அரசின் குறைந்தபட்ச திட்டம் என்ன?.. சிவ சேனாவை கலாய்க்கும் பா.ஜ.க.

கொள்ளையடிப்பதை தவிர்த்து தங்களது கூட்டணி அரசாங்கத்தின் பொதுவான குறைந்தபட்ச திட்டம் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சிவ சேனா பதில் அளிக்க வேண்டும் என பா.ஜ.க. கிண்டல் அடித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்- சர்ச்சைக்குரிய காவல் துறை அதிகாரி சச்சின் வாசே இடையிலான விவகாரம் தற்போது மகாராஷ்டிரா அரசியலை பெரும் புயலை கிளப்பியுள்ளது. மேலும் சிவ சேனா தலைமையிலான மகா விகாஸ் அகாதி (மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி) அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளையடிப்பதை தவிர்த்து உங்க அரசின் குறைந்தபட்ச திட்டம் என்ன?.. சிவ சேனாவை கலாய்க்கும் பா.ஜ.க.
சிவ சேனா

அனில் தேஷ்முக் விவகாரத்தை குறிப்பிட்டு ஆளும் சிவசேனா தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இது தொடர்பாக கூறியதாவது: கடந்த 30 நாட்களில் மகாராஷ்டிராவில் இது போன்ற குழப்பங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அதை கண்காணிப்பது கடினம். மகாராஷ்டிராவின் மகா விகாஸ் அகாதி (மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி) உண்மையில் மகா வசூலி அகாதி (மகாராஷ்டிரா வசூல் முன்னணி) என்பது தெளிவாகிறது. இந்த அரசாங்கத்தின் பொதுவான குறைந்தபட்ச திட்டம் போலீஸ் மூலம் பணம் வசூல் செய்வது.

கொள்ளையடிப்பதை தவிர்த்து உங்க அரசின் குறைந்தபட்ச திட்டம் என்ன?.. சிவ சேனாவை கலாய்க்கும் பா.ஜ.க.
அனில் தேஷ்முக்

சிவசேனாவும் அதன் அரசாங்கமும் பல கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். உங்கள் கொள்ளையடிப்பதை தவிர்த்து உங்கள் பொதுவான குறைந்தபட்ச திட்டம் என்ன? உங்கள் ஆட்சியின்கீழ் என்ன நடக்கிறது? சச்சின வாசே மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் சர்ச்சை மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியின் தன்மையை காட்டுகிறது. ஆட்சியில் நீடிக்க அவர்களுக்கு (சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு) உரிமை இல்லை. அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.