பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கும் அபிராமி துதி!

 

பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கும் அபிராமி துதி!

சின்ன சின்ன மனக்கசப்புகள் கூட மிகப்பெரிய பிளவுகளை உண்டாக்கி விடும். அப்படி பிரிந்துபோன உறவுகளை ஆன்மீகம் மூலம் மீண்டும் சேர்க்க முடியும். ஆன்மீகம் என்பதே அன்பை அடிப்படையாக கொண்டது தான். அந்த ஆன்மீகத்துக்கு அன்பை உணர்த்தி உறவுகளை இணைக்கும் வலிமை உண்டு.

அனைத்து பிரிந்த சொந்தங்களையும் ஒன்று சேர்க்கும் இந்த திரிபுரசுந்தரி மந்திரம் வாழ்க்கையில் பிரிந்தவர்கள் எவ்வளவு சீக்கிரம் ஒன்று சேர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒன்று சேர முடியும்.
பாசத்திற்குரியவர்களுடன் மீண்டும் சேர பாடவேண்டிய அபிராமி அந்தாதியின் பாடல் இது.

பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கும் அபிராமி துதி!

துணையும் தொழுது தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின் பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர் பூங்கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்கமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கும் அபிராமி துதி!

எங்களுக்கு உயிர்துணையும், நாங்கள் வணங்குகின்ற கடவுளும், எங்களை பெற்றடுத்த அன்னையும், வேதமென்னும் விருட்சத்தின் கிளையும், அதன் முடிவில் உள்ள கொழுந்தும், கீழே பரவிப் பதிந்துள்ள அதன் வேரும் குளிர்ச்சி பொருந்தியவையான மலரம்புகள், கரும்பு, வில், மென்மைமிகு பாசாங்குசம் ஆகியவற்றைத் திருக்கரத்தில் ஏந்தி நிற்கும் திரிபுரசுந்தரியே என்னும் உண்மையை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

பிரிந்த உறவுகளை ஒன்று சேர்க்கும் அபிராமி துதி!

அபிராமி பட்டர் இயற்றிய ‘அபிராமி அந்தாதியின்’ இப்பாடலை தினமும் காலையில் எழுந்து மனதில் அபிராமி அம்மனை நினைத்து 9 முறை பாடவேண்டும். மேலும், வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று பாட வேண்டும். அப்படி கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலுள்ள துளசி மாடத்திற்கு முன்பு தீபமேற்றி இப்பாடலை 9 முறை பாடி வழிபட பிரிந்த உறவினர்களும் மற்றும் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளும் மீண்டும் ஒன்றிணைவர்.

-வித்யா ராஜா