நான் பெரிய மனிதன் அல்ல… என் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக நான் நினைக்கவில்லை.. பா.ஜ.க. அமைச்சர் விளக்கம்

நான் பெரிய மனிதன் அல்ல… என் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக நான் நினைக்கவில்லை.. பா.ஜ.க. அமைச்சர் விளக்கம்

என் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக நான் நினைக்கவில்லை, நான் பெரிய மனிதன் அல்ல என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் தெரிவித்தார்.

மத்திய அமைச்சாகள் பிரஹலாத் சிங் படேல் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ், 40க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சி தலைவர்கள், பணியில் இருக்கும் நீதிபதி, வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட உறுதி செய்யப்பட்ட தொலைப்பேசி எண்கள், இஸ்ரேலின் உளவு சாப்ட்வேரான பெகாசஸை பயன்படுத்தி அடையாளம் தெரியாத அமைப்பால் கண்காணிக்கப்பட்டு இருக்கலாம் என்று சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தை கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் கடந்த 2 தினங்களாக நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுப்பட்டன.

நான் பெரிய மனிதன் அல்ல… என் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக நான் நினைக்கவில்லை.. பா.ஜ.க. அமைச்சர் விளக்கம்
நாடாளுமன்றம்

உளவு பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் மத்திய உணவு பதப்படுத்தும் துறை மற்றம் நீர் சக்தி துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் படேல் இது தொடர்பாக கூறியதாவது: செய்திதாள்களில் வெளிவந்த அறிக்கைகளை நான் பார்த்தேன். ஆனால் எனது செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக நான் நினைக்கவில்லை. நான் ஒரு பெரிய மனிதன் அல்ல. எங்கள் அரசாங்கம் அத்தகைய (உளவு) வேலையை செய்யும் என்று நான் நினைக்கவில்லை.

நான் பெரிய மனிதன் அல்ல… என் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக நான் நினைக்கவில்லை.. பா.ஜ.க. அமைச்சர் விளக்கம்
பெகாசஸ் சாப்ட்வேர்

இது போன்ற விஷயங்களில் நடவடிக்கை எடுப்பது அரசாங்கம்தான். அஸ்வினி வைஷ்ணவ் கடந்த திங்கட்கிழமை மக்களவையில் அரசாங்கத்தின் கருத்துக்களை முன்வைத்துள்ளார். கட்சியும் (பா.ஜ.க.) தனது தரப்பை முன்வைத்துள்ளது. அதனால்தான் நான் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அரசாங்கம் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து விவாதித்து அவை செயல்பட அனுமதிக்க வேண்டும். இது ஒரு சிறந்த வழியாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.