திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு!

 

திருவண்ணாமலை  அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதணைகளும் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு பிரதோஷ தினத்தில், நந்தி பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று பிரதோஷ விழாவையொட்டி, அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்தி, கொடிமரம் அருகே உள்ள நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்திக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

திருவண்ணாமலை  அருணாச்சலேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு!

இதையொட்டி, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற பூஜையில் நந்தி பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், பால் உள்ளிட்ட மங்கல பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து, பெரிய நந்திக்கு மகா தீபாராதணையும் காண்பிக்கப்பட்டது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பிரதோஷ நிகழ்ச்சியில் கோயில் சிவாச்சாரியார்கள், ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.