புரட்டாசியில் பிரதோஷ தரிசனம் பெரும் புண்ணியம்!

 

புரட்டாசியில் பிரதோஷ தரிசனம் பெரும் புண்ணியம்!

பட்சப் பிரதோஷமும், ருண விமோசன பிரதோஷமும் இணைந்து வரும் இன்னாளில் சிவபெருமானையும் நந்திதேவரையும் வணங்கினால் வளங்கள் வந்து சேரும். எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும்.
பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று ஞான நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

புரட்டாசியில் பிரதோஷ தரிசனம் பெரும் புண்ணியம்!

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13ஆவது திதியாக வரும் “திரயோதசி” திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு (பறவையோடு உள்ள அது சம்பந்தப்பட்ட லிங்கம் மைலாப்பூர், மயிலாடு துறை போல்) வழிபாடு செய்வது சிறப்பானதாகும். செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும்.
ருணம் என்பது கடன் என்று பொருள். இந்நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபம் ஏற்றி,பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பதன் மூலம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால் பிரதோஷம் தினத்தில் கறந்த பசும்பால் கொடுத்து வழிபட வேண்டும். இளநீர் வாங்கித் தரலாம். வில்வ இலை வாங்கிக் தரலாம்.

புரட்டாசியில் பிரதோஷ தரிசனம் பெரும் புண்ணியம்!

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். மனிதனுக்கு வரும் ருணம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது. இதனால், செவ்வாயால் வரும் கெடுபலன் நீங்கும்.பித்ரு தோஷம் விலகி, முன்னோர்கள் ஆசி கிடைக்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு. அனைத்து தோஷங்களும் பிரதோஷ விருதத்தால் நீங்கும். ஒரே ஒரு தோஷம் மட்டும் அதனால் நமக்கு வரும். அது, சந்தோஷம் மட்டுமே.

புரட்டாசியில் பிரதோஷ தரிசனம் பெரும் புண்ணியம்!

பிரதோஷ காலமான மாலை 4:30 மணி முதல் 6:30 மணிவரை, உலகில் உள்ள அத்தனை தேவதைகள், தெய்வங்களும், நேர்மறை எண்ணம் கொண்ட சக்திகள், சித்தர்கள் அங்கு கூடி சிவபெருமானை பார்ப்பதாக ஐதீகம். அந்த நேரத்தில் நாம் கோயிலில் எந்த வேலையாவது செய்தால், அவர்களின் பார்வை நம் மேல்படும், நம் வாழ்வின் பிரச்சினைகள், பாவங்கள் போக்குவார்கள்.

புரட்டாசியில் பிரதோஷ தரிசனம் பெரும் புண்ணியம்!

அன்று கோயிலில் தயிர் சாதம் வழங்குபவர்களுக்கு, நீண்ட நாள் காரியம் நிறைவேறும். அங்கு இருக்கும் காமதேனு பசுவிற்கு 4 மஞ்சள் வாழைப்பழம் கொடுக்கவும். விரதம் இருந்து சிவபெருமானை வழிபடும்போது நந்தி தேவரின் இரு கொம்புகளுக்கிடையே வணங்குகள். நந்திதேவரின் காதுகளில் உங்களது குறைகளை சொல்லி வணங்குகள்.
ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!! ஓம் நமசிவாயா!!!

-வித்யா ராஜா