சென்னையில் கொரோனா உயிரிழப்பு மேலும் அதிகமாகும்! எச்சரிக்கும் சுகாதார நிபுணர்!!

 

சென்னையில் கொரோனா உயிரிழப்பு மேலும் அதிகமாகும்! எச்சரிக்கும் சுகாதார நிபுணர்!!

சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலின் 2 ஆம் அலையில் சென்னையில் தினசரி பாதிப்பு 2000ஐ தாண்டியுள்ளது. இதே வேகத்தில் கொரோனா பரவினால் வெண்டிலேட்டர் தேவை அதிகரிக்கும் என்றும், உயிரிழப்புகள் அதிகமாகும் என்றும் சுகாதார நிபுணர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர், “இதயத்தை நொறுக்குகிறது. கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்தால், சில நாட்களுக்குப் பிறகு இறப்புகளும் அதிகரிக்கும். மரணங்கள் பாதிப்புகளில் பின்தங்கியுள்ளன. உயிரைக் காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் நம் பங்கைச் செய்யலாம். சென்னையில் தினசரி பாதிப்பு 2,100ஐ தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் அலைகளில் பதிவான தினசரி பாதிப்பாகும். கொரோனா மீண்டும் நம்ம சென்னையில் முன்பை விட வேகமாக பரவுகிறது. இந்த விகிதத்தில் தொடர்ந்து பரவினால், வெண்டிலேட்டர் தேவை அதிகரிக்கும். ஏராளமான உயிர்களை இழப்போம்.

சென்னையில் கொரோனா உயிரிழப்பு மேலும் அதிகமாகும்! எச்சரிக்கும் சுகாதார நிபுணர்!!

கடந்த ஆண்டு, ஜூலை முதல் வாரத்தில் இந்த எண்ணிக்கையை எட்டினோம். இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில், அடுத்த சில நாட்களுக்கு பாதிப்புகள் தொடர்ந்து உயரும். இப்போது கொரோனா பரவுவதைக் குறைப்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டால், குறைந்தது 10-14 நாட்களுக்குப் பிறகு பாதிப்புகளை குறைக்கலாம். நெருக்கடியை தவிர்க்க நாம் வீட்டிலேயே இருக்க வேண்டும், முகக்கவசம் அணியவேண்டும், வீடு / பணியிடங்கள் / அடுக்குமாடி வளாகங்களில் குழு அடிப்படையிலான நடவடிக்கைகளைத் தவிர்க்கவும், கூட்டங்களைத் தவிர்க்கவும், அடுத்த 2-3 மாதங்களுக்கு எந்தவொரு கூட்டங்களையும் திட்டமிட வேண்டாம், உங்களால் முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள், வெளியில் சாப்பிடுவதை தவிருங்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போடுங்கள், ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பயப்படாமல் பரிசோதனை செய்யுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.