அதிவேகமாக பரவும் கொரோனா… காவலர்களுக்கு பிபிஇ கிட் : நிதி ஒதுக்கீடு!

அதிவேகமாக பரவும் கொரோனா… காவலர்களுக்கு பிபிஇ கிட் : நிதி ஒதுக்கீடு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சியூட்டும் அறிக்கை வெளியிட்டது. இதில், தமிழகத்தில் மட்டுமே 24,898 பேருக்கு கொரோனா உறுதியானது.

அதிவேகமாக பரவும் கொரோனா… காவலர்களுக்கு பிபிஇ கிட் : நிதி ஒதுக்கீடு!

பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வர அதிரடி நடவடிக்கையை தமிழக அரசு கையாண்டு வருகிறது. இரவு நேர பொதுமுடக்கம், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொதுமுடக்கம், கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

அதிவேகமாக பரவும் கொரோனா… காவலர்களுக்கு பிபிஇ கிட் : நிதி ஒதுக்கீடு!

இந்த நிலையில், காவலர்களுக்கு PPE கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடை வழங்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. PPE கிட் உடன், கையுறை, கிருமிநாசினி, முகக்கவசங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, காவலர்களுக்கு அரசு சார்பில் முகக்கவசம் மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.