ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்!

 

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்!

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ரஷ்யா நாட்டின் சோவித்ஸ்கயா பகுதியில் இருக்கும் காவன் நகரில் இருந்து 88 கி.மீ தொலைவில் இருக்கும் இடத்தில் இன்று அதிகாலை 4.24 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் பயத்தில் வீடுகளிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர். ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.4ஆக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்!

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் நிகழ்ந்ததா? வீடுகள் சேதமடைந்ததா? உள்ளிட்ட எந்த தகவலும் இன்னும் வெளிவரவில்லை. ரஷ்யாவில் நிகழ்ந்த இந்த கடுமையான நிலநடுக்கம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில், அமெரிக்காவின் நெவாடா மினா பகுதிக்கு தென்கிழக்கே 34 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.