குவிந்தது வருவாய்… ரூ.3,368 கோடியை லாபமாக அள்ளிய பவர் கிரிட்..

 

குவிந்தது வருவாய்… ரூ.3,368 கோடியை லாபமாக அள்ளிய பவர் கிரிட்..

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,367.7 கோடி ஈட்டியுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, மின்சாரத்தை பரிமாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50 சதவீதம் இந்நிறுவனத்தின் மின் விநியோக கட்டமைப்பு வாயிலாகத்தான் நாடு முழுவதும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் தனது கடந்த டிசம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.

குவிந்தது வருவாய்… ரூ.3,368 கோடியை லாபமாக அள்ளிய பவர் கிரிட்..
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.3,367.7 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும். குறைந்த நிதி செலவினம் மற்றும் அதிக வருவாய் காரணமாக பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ளது.

குவிந்தது வருவாய்… ரூ.3,368 கோடியை லாபமாக அள்ளிய பவர் கிரிட்..
மின் விநியோகம்

2020 டிசம்பர் காலாண்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.10,142.5 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 8.3 சதவீதம் அதிகமாகும். 2019 டிசம்பர் காலாண்டில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.9,364.4 கோடி ஈட்டியிருந்தது.