மிரட்டும் கொரோனா – ஒத்தி வைக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

 

மிரட்டும் கொரோனா – ஒத்தி வைக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 7 கோடியே 45 லட்சத்து 34 ஆயிரத்து 581 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 5 கோடியே 23 லட்சத்து 73 ஆயிரத்து 081 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 16 லட்சத்து 55 ஆயிரத்து 230 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 2,05,06,270 பேர்.

மிரட்டும் கொரோனா – ஒத்தி வைக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

கொரோனா வைரஸ் பரவல் இந்த உலகின் சுழற்சியையே மாற்றி அமைத்துவிட்டது. குறிப்பாக விளையாட்டுப் போட்டிகள் திட்டமிட்டப்படி நடத்தமுடியாமல் மாற்றி அமைக்கப்படுகின்றன. அப்படி ஓர் அறிவிப்பு தற்போது வந்துள்ளது.

டென்னி விளையாட்டில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மிக முக்கியமானதாகும். 2021 ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் ஜனவரி மாதம் 18-31 இடைப்பட்ட நாட்களில் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.

மிரட்டும் கொரோனா – ஒத்தி வைக்கப்பட்ட ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்

ஆஸ்திரேலியாவில் கொரோனா ஓரளவு கட்டுக்குள் இருந்தாலும், பல இடங்களில் கொஞ்சம் கொஞ்சம் அதிகரிக்கிறது. பல நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. எனவே, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற இருந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்தி வைக்கப்படுகிறது.

மாற்றி அமைக்கப்பட்ட தேதியாக பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கி 28- ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரில் கலந்துகொள்ளும் வீரர்கள், அவர்களின் பயிற்சியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தவும் படுவார்கள் என்றும் தெரிகிறது.