அதிமுகவின் நாளைய முதல்வர் வேட்பாளரே!… மதுரையில் ஈபிஎஸுக்கு ஆதரவாக போஸ்டர்கள்!

 

அதிமுகவின் நாளைய முதல்வர் வேட்பாளரே!… மதுரையில் ஈபிஎஸுக்கு ஆதரவாக  போஸ்டர்கள்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமிக்கு வாழ்த்துகள் என மதுரையில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதிமுகவின் நாளைய முதல்வர் வேட்பாளரே!… மதுரையில் ஈபிஎஸுக்கு ஆதரவாக  போஸ்டர்கள்!

தமிழக இளைஞர் அரசியல் முற்போக்கு கட்சியை சேர்ந்த இளைஞர்கள் மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அதில் தமிழகத்தின் தலைமகனே… ஏழைகளின் துயர் துடைக்க வந்த தூயவனே…மாணவர்களின் வாழ்க்கைக்கு ஒளியாய் வந்த ஒளிவிளக்கே… மக்களின் நல்லவனே எதிரிகளின் வல்லவனே தமிழகத்தின் இன்றைய முதல்வரே! அதிமுகவின் நாளைய முதல்வர் வேட்பாளராக எங்களுடைய வாழ்த்துக்கள் என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதிமுகவின் நாளைய முதல்வர் வேட்பாளரே!… மதுரையில் ஈபிஎஸுக்கு ஆதரவாக  போஸ்டர்கள்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை வெடித்துள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் தனித்தனியே முதல்வர், துணை முதல்வர் இருவரையும் சந்தித்து வருகின்றனர். ஒருசில அமைச்சர்கள் வெளிப்டையாகவே ஈபிஎஸ் தான் அடுத்த முதல்வர் என்று கூறி வரும் நிலையில் மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.