முதல்வரே தியேட்டர் என்னாச்சு? ‘மாஸ்டர்’ வகுப்புக்காக காத்திருக்கிறோம்: வைரலாகும் விஜய் ரசிகர்களின் போஸ்டர்!

 

முதல்வரே தியேட்டர் என்னாச்சு? ‘மாஸ்டர்’ வகுப்புக்காக காத்திருக்கிறோம்: வைரலாகும் விஜய் ரசிகர்களின் போஸ்டர்!

மாஸ்டர் படம் ரிலீஸ் ஆவதற்காக காத்திருக்கிறோம் என மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இளைய தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லன் ஆக நடித்திருக்கிறார். இதில் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ், விஜே ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முதல்வரே தியேட்டர் என்னாச்சு? ‘மாஸ்டர்’ வகுப்புக்காக காத்திருக்கிறோம்: வைரலாகும் விஜய் ரசிகர்களின் போஸ்டர்!

இப்படித்தின் இசை வெளியீட்டு விழா பேலஸ் ஹோட்டலில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன் பிறகு வெளியான வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடையே பேராதரவை பெற்றன.

முதல்வரே தியேட்டர் என்னாச்சு? ‘மாஸ்டர்’ வகுப்புக்காக காத்திருக்கிறோம்: வைரலாகும் விஜய் ரசிகர்களின் போஸ்டர்!

விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கிடந்த இந்த படம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிபோடப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதால் படபிடிப்பு உள்ள அனைத்துக்கும் அனுமதி அளித்த அரசு, தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கின்றன.

முதல்வரே தியேட்டர் என்னாச்சு? ‘மாஸ்டர்’ வகுப்புக்காக காத்திருக்கிறோம்: வைரலாகும் விஜய் ரசிகர்களின் போஸ்டர்!

இந்த நிலையில், மாஸ்டர் வகுப்பிற்காக காத்திருக்கிறோம் என மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், கொரோனா மறந்தாச்சு, இயல்புநிலை வந்தாச்சு, தியேட்டர் என்னாச்சு? என விஜய் ரசிகர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருவதால், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.