’இந்து மதத்தை காக்க வந்த இரண்டாம் ராமானுஜரே’.. ஹெச். ராஜாவுக்கு போஸ்டர் ஒட்டிய தொண்டர்கள்

 

’இந்து மதத்தை காக்க வந்த இரண்டாம் ராமானுஜரே’.. ஹெச். ராஜாவுக்கு போஸ்டர் ஒட்டிய தொண்டர்கள்

மதுரையில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் போஸ்டர்களால் சுவர்களை நிரப்பி வருவது வழக்கமான ஒன்றே. விஜய்யின் திருமண நாளுக்கு போஸ்டர், மாஸ்டர் எப்போது வரும் என போஸ்டர், மாஸ்டர் ஓடிடியில் வரக்கூடாது என்பன போன்ற போஸ்டர்களை அனுதினமும் ஒட்டி வைரலாக்கிவருகின்றனர். இதனால் போஸ்டர் அரசியல் மதுரையில் ட்ரெண்டாகி வருகிறது. இதனை தொடர்ந்து சூர்யா ரசிகர்களும் போஸ்டர் ஒட்ட ஆரம்பித்தனர்.

’இந்து மதத்தை காக்க வந்த இரண்டாம் ராமானுஜரே’.. ஹெச். ராஜாவுக்கு போஸ்டர் ஒட்டிய தொண்டர்கள்

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதனையடுத்து அக்கட்சி தொண்அர்கள் இனிப்புகளை வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஹெச். ராஜாவுக்கு போஸ்டரும் ஒட்டின. திராவிட கட்சிகளை போல பாரதிய ஜனதா கட்சியிலும் இந்த போஸ்டர் கலாச்சாரம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஹெச் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு இந்து மதத்தை காக்க வந்த இரண்டாம் ராமானுஜரே என புகழ்ந்து தேனி நகரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.