கிளைச் செயலாளர் பதவி ஒரு கோடி விலையா? திமுகவுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

 

கிளைச் செயலாளர் பதவி ஒரு கோடி விலையா? திமுகவுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால்  பரபரப்பு!

திமுகவில் கிளைச் செயலாளர் பதவி ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போவதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்குத் தயாராகி வருகிறது திமுக . இந்த சூழலில் அக்கட்சியின் மீது எழுந்துள்ள பரபரப்பு புகார் ஒன்று திமுக தலைமையை ஆட்டம் காண வைத்துள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் கிளைச் செயலாளர் பதவியானது ஒரு கோடிக்கு ஏலம் போவதாக அக்கட்சியின் அதிருப்தியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் இதை போஸ்டராக அச்சடித்து ஒட்டியுள்ளனர்.

கிளைச் செயலாளர் பதவி ஒரு கோடி விலையா? திமுகவுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால்  பரபரப்பு!

அந்த போஸ்டரில் கழகத்தின் கிளை செயலாளர் பொறுப்புக்கு ஒரு கோடி இருந்தால்தான் வரமுடியும் என்று ஒன்றிய செயலாளர் சொல்வது உண்மையா? ஒன்றிய செயலாளர் மீது தலைமைக்குப் பல புகார்கள் அனுப்பியும் அவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? இவரின் செயல்கள் மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரியுமா என்றும் கட்சிக்காரர்கள் இடத்தில் அவர் பெயர் எடுத்து தன்னிச்சையாகச் செயல்படும் அவரை மாற்றி புதிய பொறுப்புக்கு அறிவிக்க வேண்டும் என்பது போன்ற வாசகங்களுடன் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

கிளைச் செயலாளர் பதவி ஒரு கோடி விலையா? திமுகவுக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால்  பரபரப்பு!

சொந்த கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.