சேமிப்புக்கு பாதுகாப்பு அளிக்கும் அஞ்சல் துறை திட்டங்கள் !

 

சேமிப்புக்கு பாதுகாப்பு அளிக்கும் அஞ்சல் துறை  திட்டங்கள் !

கொரோனா அச்சம் நீங்கி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், எதிர்காலத்தில் கொரோனா போன்ற பேரிடர்களைச் சந்திக்க சேமிப்பும் நிதித் திட்டமிடலும் அவசியம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். அந்த வகையில் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்கள் குறித்து பார்க்கலாம்…

தற்போது அஞ்சல் அலுவலகங்களில் தபால் வங்கி செயல்படுவதால், இதர வங்கிகளில் கிடைக்கும் சேவைகள் போல தபால் அலுவலகங்களிலும் சேவைகள் கிடைக்கின்றன.

சேமிப்புக்கு பாதுகாப்பு அளிக்கும் அஞ்சல் துறை  திட்டங்கள் !

பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு, வருமான வரி விலக்கு அளிக்கக் கூடிய சேமிப்பு திட்டங்கள் என பல வகை நிதிச் சேவைகளை அஞ்சல் அலுவலகங்கள் அளித்து வருகின்றன. சிறு சேமிப்புத் திட்டங்கள் என்று அழைக்கப்படும் பிபிஎப், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு, செல்வ மகள் சேமிப்புத் திட்டம் எனவும் திட்டங்களை நமது நிதி திட்டமிடலுக்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.

அஞ்சல் அலுவலகங்களில் சேமிக்கப்படும் தொகைக்கு நியாயமான வட்டி விகிதங்களும் அளிக்கப்படுகின்றன. தபால் அலுவலக சேமிப்புகளுக்கு 4 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படுகிறது.
குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 500 ரூபாய் வைத்துக் கொள்ள முடியும். இதற்கு செக் புக் மற்றும் டெபிட் கார்டு போன்றவற்றையும் கிடைக்கிறது. சேமிப்புக் கணக்குகளில் உள்ள பணத்தினை
அருகில் உள்ள தபால் நிலையங்களிலும் எடுத்துக் கொள்ள முடியும்.

சேமிப்புக்கு பாதுகாப்பு அளிக்கும் அஞ்சல் துறை  திட்டங்கள் !

அஞ்சல் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்கு 7.2 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் மாதம் 10 ரூபாய் கூட சேமிக்க முடியும். பள்ளி குழந்தைகளுக்குச் சேமிப்புப் பழக்கத்தினைக் கொண்டு வரை இது ஏற்ற திட்டமாக இருக்கும்.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இதற்கு 80சி பிரிவின் கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

பிபிஎப் எனப்படுகிற பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படுகிறது. இதில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ஒன்றரை லட்ச ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

சேமிப்புக்கு பாதுகாப்பு அளிக்கும் அஞ்சல் துறை  திட்டங்கள் !

6.90 சதவீத வட்டியில் கிசான் விகாஸ் பத்திரம் அளிக்கப்படுகிறது. இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் கிடையாது. குழந்தைகளின் எதிர்கால கல்வி தேவைக்கு முதலீடு செய்ய ஏற்ற திட்டம் இது.

சுகன்யா சம்ரிதி யோஜனா என்கிற பெயரில் பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமாக செல்வ மகள் சேமிப்பு திட்டம் உள்ளது. 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யயலாம். 7.6 சதவீத வட்டி கிடைக்கும்.

அ.ஷாலினி