“7.5% இடஒதுக்கீடு தொடர்பாக விரைவில் சாதகமான அறிவிப்பு வெளியாகும்” : அமைச்சர் சி. வி. சண்முகம்

“7.5% இடஒதுக்கீடு தொடர்பாக விரைவில் சாதகமான அறிவிப்பு  வெளியாகும்” : அமைச்சர் சி. வி. சண்முகம்

7.5% உள்இடஒதுக்கீடு விவகாரம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார்.

“7.5% இடஒதுக்கீடு தொடர்பாக விரைவில் சாதகமான அறிவிப்பு  வெளியாகும்” : அமைச்சர் சி. வி. சண்முகம்

தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்புகளுக்கான 7.5% உள்ஒதுக்கீடு தொடர்பான மசோதா தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள நிலையில் ஆளுநர் இதன் மீது உடனடியாக முடிவெடுக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இதனிடையே அதிமுக அமைச்சர்கள் ஆளுநரை நேரில் சந்தித்து பேசினர். அத்துடன் திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் 7.5% உள்ஒதுக்கீடு விவாகாரத்தில் உடனடி முடிவெடுக்கக்கோரி கடிதம் எழுதினார் . ஆனால் இந்த மசோதா தொடர்பாக முடிவெடுக்க இன்னும் 4 வாரங்கள் தேவை என் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“7.5% இடஒதுக்கீடு தொடர்பாக விரைவில் சாதகமான அறிவிப்பு  வெளியாகும்” : அமைச்சர் சி. வி. சண்முகம்

இந்நிலையில் விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், “7.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக விரைவில் சாதகமான ஒரு அறிவிப்பு வெளியாகும். அதுவரை கலந்தாய்வு நடக்காது” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநருக்கு அழுத்தம் கொடுத்தோம். ஆனால் மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறிப்பிடத்தக்கது.