பூரத்தில் புருஷன் புவனத்தை ஆள்வான் – பூரம் நட்சத்திர பொதுப் பலன்கள்

‘பூரத்தில் புருஷன் புவனத்தை ஆள்வான்’ என்று பூர நட்சத்திரம் பற்றி ஒரு வாக்கு உள்ளது.

‘பூரத்தில் புருஷன் புவனத்தை ஆள்வான்’ என்று பூர நட்சத்திரம் பற்றி ஒரு வாக்கு உள்ளது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களைக் கவரும் வசீகரத் தோற்றம் கொண்டிருப்பார்கள். யதார்த்தமாக இருக்கும் அதேசமயத்தில் எதையும் எளிதாக எடுத்துக் கொள்வார்கள். எப்போதும் ஏதாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். பிறருக்கு உதவும் இரக்க குணம் இவர்களிடத்தில் இருக்கும். காரியம் சாதிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். முன்கோபத்தில் வார்த்தைகளை விட்டாலும், வருத்தம் தெரிவிக்க யோசிக்க மாட்டார்கள். எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள். காரியத்தில் கண்ணாக இருப்பதுடன் எதிரிகளை வெற்றி பெறும் வல்லமை பெற்றிருப்பார்கள். பூர நட்சத்திரக்காரர்கள் மற்றவர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்பார்கள்.

எந்த நிலையிலும் நேர்மைக்கும், சத்தியத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். சுயமாக முன்னேறுவதற்காக கடுமையாக உழைப்பார்கள். எல்லோரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உதவி செய்வதற்கு தயங்க மாட்டார்கள். அதேபோல மற்றவர்கள் செய்த உதவியை எப்போதும் மறக்க மாட்டார்கள். வெட்டியாக இருப்பவர்களை கண்டால் அறவே பிடிக்காது. தங்கள் உடல்நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என நினைப்பார்கள். அதிகமாக ஊர் சுற்றுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

Most Popular

“கொலை மிரட்டல் விடுகிறார் மீரா மிதுன்” : நடிகை ஷாலு ஷம்மு போலீசில் புகார்!

பிக் பாஸ் பிரபலமான மீரா மிதுன் சமீபகாலமாக நடிகர் விஜய், சூர்யா, நடிகை திரிஷா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக நடிகர் சூர்யாவின்...

கன்னியாஸ்திரீ பாலியல் வழக்கு… முன்னாள் பிஷப் மீது குற்றச்சாட்டு பதிவு!

கன்னியாஸ்திரீ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஜலந்தர் முன்னாள் பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கேரள நீதிமன்றம் குற்றச்சாட்டைப் பதிவு செய்தது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கிறிஸ்தவ பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முல்லக்கல். இவர்...

தலைமை நீதிபதியை விமர்சித்து ட்வீட்… வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என அறித்தது உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளை விமர்சித்து ட்வீட் வெளியிட்டது தொடர்பான வழக்கில் பிரஷாந்த் பூஷன் குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளை விமர்சித்து மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ட்விட்டரில்...

“எலி மருந்தை சாப்பிட்ட 5 சிறுமிகள்” தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி; ராமநாதபுரத்தில் பரபரப்பு!

கொரோனா பாதிப்பு தமிழகத்தை புரட்டி போட்டு வருகிறது. பல மாதங்களாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு மக்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது. எப்போது இந்த கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பும் என...
Do NOT follow this link or you will be banned from the site!