Home மாவட்டங்கள் சென்னை கார் மோதி 9 ஆடுகள் பலி - நிற்காமல் சென்ற கார் குறித்து போலீஸ் விசாரணை!

கார் மோதி 9 ஆடுகள் பலி – நிற்காமல் சென்ற கார் குறித்து போலீஸ் விசாரணை!

சென்னை

கார் மோதி 9 ஆடுகள் பலி - நிற்காமல் சென்ற கார் குறித்து போலீஸ் விசாரணை!

சென்னை பூந்தமல்லியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற ஆடுகள் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் 9 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. பூந்தமல்லி அடுத்த மேல்மா நகர் பகுதியை சேர்ந்த ராஜி மற்றும் ஜீவா ஆகியோர், தங்களது வீடுகளில் சொந்தமாக ஆடுகளை வைத்து வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் அருகேயுள்ள வயல் வெளிகளில் மேய்ச்சலுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

கார் மோதி 9 ஆடுகள் பலி - நிற்காமல் சென்ற கார் குறித்து போலீஸ் விசாரணை!

இந்நிலையில், இன்று மதியம் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் மீண்டும் வீடு திரும்புவதற்காக பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்துசென்றன. அப்போது, அவ்வழியே வந்த கார் ஒன்று ஆடுகள் மீது அதிவேகமாக விட்டு, நிற்காமல் தப்பிச்சென்றது. இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட 9 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர்கள் இருவரும், பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

கார் மோதி 9 ஆடுகள் பலி - நிற்காமல் சென்ற கார் குறித்து போலீஸ் விசாரணை!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18+ முன்பதிவு செய்வது அவசியம்” : மதுரை மாநகராட்சி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. இதை...

மகாராஷ்டிராவை சூறையாடும் கனமழை; 136 பேர் மரணம்!

மகாராஷ்டிராவில் ஏற்பட்ட மழை பாதிப்புகளால் நேற்று மாலை வரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது....

தமிழ்நாட்டில் நூலகங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவு!

போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள பொது நூலகங்கள் இன்று முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

கணவனை ஏமாற்றிவிட்டு… புதுமணப்பெண்ணை கடத்திய தோழி!

ஆம்பூர் அருகே திருமணமாகி இரண்டே மாதங்கள் ஆன புதுமணப்பெண் அவரது தோழியால் கொல்கொத்தா அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி மலை கிராமத்தில்...
- Advertisment -
TopTamilNews