குழப்பங்களில் இருந்து விடுபட பஞ்ச பூத விளக்கு பூஜை!

 

குழப்பங்களில் இருந்து விடுபட பஞ்ச பூத விளக்கு பூஜை!

புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில் எதிர்மறை சக்திகளை நீக்கி, மன உறுதியையும், ஆன்மிக சக்திகளையும் வழங்கும் பஞ்ச பூத விளக்குப் பூஜையை செய்திட, புதன் கிழமை மிகவும் ஏற்ற நாளாகும்.

உடல், உள்ளம், புத்தி, மனம், அறிவு ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களால் ஆனவை. ஆதலின், இவற்றைப் பஞ்ச பூத சக்திகளால் சுத்திகரிப்பதற்காக, கோயிலிலும், வீட்டிலும் புதன் கிழமை தோறும் ஐந்து விளக்குகளை ஏற்றிப் பூஜித்தல் சிறப்புடையதாகும். உயர்ந்த எண்ணங்களையும், நல்ல எண்ணங்களையும் தோற்றி வைப்பதும், நினைத்த காரியங்களை வெற்றிபெற வைப்பதும், தெய்வாம்சம் நிறைந்ததாகவும் இந்த பஞ்ச பூத விளக்கு பூஜை கருதப்படுகிறது.

கடவுளுடைய தெள்ளிய வடிவுகளில் தீபப் பிரகாசமும் ஒன்று. இதனை வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுப்ர தீப சக்திகள் வாழ்கின்ற நாளில் தீர்கமான சுப வளத்தைத் தர வல்லவை. சுகம் வேண்டுமா? சுபம் வேண்டுமா? சுகம் எனில் செய்த நற்காரியங்களில் விளையும் புண்ணியத்தால் விளையும் நன்மைகளாகும். புண்ணியம் குறைந்தால் சுகம் குறையும். இது நிரந்தரமான நல் அமைதி ஆனந்தத்துடன் பூரிப்பதற்கு சுதபுத சுப சக்திகள் தேவை. சுபம் என்பது மங்களம், ஆனந்தம், புனிதம் மூன்றும் பூரித்து நிறைவதாகும்.

குழப்பங்களில் இருந்து விடுபட பஞ்ச பூத விளக்கு பூஜை!

புதன் கிழமை தோறும் உடல், உள்ளம், புத்தி, மனம், அறிவு ஐந்தையும் சுத்திகரிக்க உதவிடுவதாக, கைகளால் அரைத்துக் காய வைத்த சந்தனத் தூள், அத்தர், புனுகு, ஜவ்வாது, புனுகு ஆகிய ஐந்தையும் கலந்த திரவியப் பொடியைச் சாம்பிராணி தூபத்தில் அவ்வப்போது நறுமணம் நிறைய இட்டு கோயிலிலும் வீட்டிலும் இட்டு வருவதால், மனக் குழப்பங்கள் தணிந்து எத்தகையத் துன்பங்களிலிருந்தும் மனம் சிறிது, சிறிதாக விடுபட்டு அமைதி பெறுவதை நன்கு காணலாம்.

-வித்யா ராஜா