சமந்தா அவ்வளவு ஒன்றும் அழகில்லை – பூஜா ஹெக்டே

ஊரடங்கால் அனைத்து நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் சமூக வலைதளத்தில் அதிக நாட்டத்தை காட்டிவருகின்றனர். தினந்தினம் செல்பி எடுத்து பதிவிடுவது, தன்னுடைய ஊரடங்கு நேரத்தை பெற்றொரிடம் செலவிடுவது போன்ற புகைப்படத்தை பதிவிடுவது, குழந்தை பருவ புகைப்படங்களை வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். அப்படி பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு புகைப்படத்தால் சர்ச்சை வெடித்துள்ளது. இதற்காக நடிகை சமந்தாவிடம் பூஜா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்திவருகின்றனர்.


முகமூடி படத்தில் நடித்திருந்த நடிகை பூஜா ஹெக்டே, தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இன்று அவர் இன்ஸ்டாகிராம் பதிவில், சமந்தா அவ்வளவு அழகாக ஒன்றும் இல்லை என பதிவிடப்பட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் முடக்கப்பட்டிருப்பதாக பூஜா ஹெக்டே ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “எனது இன்ஸ்டாகிராம் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர். கடந்த சில மணிநேரங்களில் வந்த பதிவுகளை தவிர்த்துவிடுங்கள்” என்று விளக்கமளித்துள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் பதிவிட்ட பதிவில் முடக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை தனது டெக்னிக்கல் டீம் மீட்டு சரிசெய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதாக காரணம் கூறினாலும் சமந்தாவின் ரசிகர்கள் அவரை விட்டபாடில்லை. ரசிகர்கள் ட்விட்டரில் போர் நடத்திக் கொண்டிருக்க, தான் மகிழ்ச்சியாக இருப்பதை உணர்த்தும் விதமாக புதிய புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார் சமந்தா.

Most Popular

கோழிக்கோடு விமான நிலையத்தில் கேரள ஆளுநர் , முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு!

இடைவிடாது பெய்யும் கனமழை, நிலச்சரிவில் காணாமல் போன மக்கள் என கடந்த சில நாட்களாக துயரத்தின் உச்சத்தில் இருக்கும் கேரள மாநிலத்திற்கு மேலும் ஒரு சோக செய்தியாக வந்ததது கோழிக்கோடு விமான விபத்து. துபாயிலிருந்து...

மலையும் மழையும்தான் கேரள விமான விபத்துக்கு காரணமா?

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் 2 விமானிகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலையும், மழையும்தான் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்குமா என்று பேசப்படுகிறது. 191...

தொற்றிக் கொண்ட கொரோனா… உயிர் போய்விடுமோ என்று அச்சம்… உயிரை மாய்த்துக் கொண்ட உளவு பிரிவு அதிகாரி!- சென்னையில் அதிர்ச்சி

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, உயிர் போய்விடுமோ என்ற அச்சத்தில் சென்னை வருமான வரித்துறையில் உளவு பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்து சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம்...

கேரள விமான விபத்து எதிரொலி : கோழிக்கோடு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது!

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. 190 பேர் பயணித்த இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள்,...