சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் ‘நிறை நாழி படி’ !

 

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் ‘நிறை நாழி படி’ !

சிவன்மலை ஆண்டவர் கோயிலில் இந்தாண்டு உத்தரவு பெட்டிக்கான பூஜை தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் பகுதியில் சிவன்மலை ஆண்டவர் சுப்ரமணிய சாமி கோவில் உள்ளது. இங்குள்ள ஒரு உத்தரவு பெட்டியில் ஏதாவது ஒரு பொருளிருந்தால் அது சம்பந்தமாக நாட்டில் ஒரு நிகழ்வு நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. பக்தர்கள் கனவில் தோன்றி கடவுள் சொல்லும் பொருளை வைத்து பூஜை செய்தால் அது சம்பந்தமாக ஏதாவது நாட்டில் நடக்கும் என்பது ஐதீகமமாம்.

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் ‘நிறை நாழி படி’ !

அந்த வகையில் கடந்தாண்டு பெட்டியில் மஞ்சள் திருமாங்கல்யம் வைத்து பூஜை செய்தார்கள். இதனால் சுப காரியம் நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கொரோனா வைரஸ் பரவி மக்கள் கொத்து கொத்தாக மடிய தொடங்கினர். இதுகுறித்து கூறும் அப்பகுதி மக்கள், கொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்ள மஞ்சளை பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். இதனால் உத்தரவு பெட்டியில் வைத்த மஞ்சள் மகத்துவம் பெற்று உள்ளது. கொரோனா குறித்து சிவன் மலை ஆண்டவர் முன்கூட்டியே உணர்த்தி விட்டார் என்று நம்பிக்கை குறையாமல் கூறி வருகிறார்கள்.

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் ‘நிறை நாழி படி’ !

இந்நிலையில் சிவன்மலை ஆண்டவர் கோயிலில் இந்தாண்டு நிறை நாழி படி அரிசியுடன் கோணுசி வைத்து இன்று முதல் பூஜை தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தாண்டு விவசாயத்தில் நல்ல லாபம் மற்றும் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. முன்னதாக சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் தண்ணீர் இருந்ததால் நாட்டில் சுனாமி வந்தது என்றும் துப்பாக்கி தோட்டா இருந்த போது கார்கில் போர் நடந்ததது என்றும் பக்தர்கள் கூறி வருவது கவனிக்கத்தக்கது.