`மனைவியின் இறப்பை தாங்க முடியவில்லை!’- ஒரு மாதத்தில் உயிரை மாய்த்த போலீஸ்காரர்; பெற்றோரை இழந்து தவிக்கும் மகன்

மனைவியின் தற்கொலையால் மனவேதனையில் இருந்த காவலர் ஒருவர், ஒரு மாதத்தில் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். பெற்றோரை இழந்து மகன் தவித்து வருகிறார். இந்த சோக சம்பவம் பொன்னேரியில் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, கெங்குசாமி நாயுடு தெருவை சேர்ந்தவர் துரைமுருகன் (43). இவர், மீஞ்சூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி ஜெயமாலா. இந்தத் தம்பதியினருக்கு ஹரிஸ்ரீராம் என்ற மகன் இருக்கிறார்.

இந்தநிலையில் கடந்த 22.5.2020-ல் ஜெயமாலா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி மீதுள்ள பாசம் காரணமாக துரைமுருகன், மனமுடைந்து காணப்பட்டார். அதனால், முன்பு தங்கியிருந்த வீட்டிலிருந்து பொன்னேரி மதீனாபள்ளி தெருவுக்கு மகனுடன் துரைமுருகன் குடிபெயர்ந்தார். கடந்த 24-ம் தேதி துரைமுருகனின் மகன், பெரியப்பா பாண்டியன் வீட்டில் தங்கினார். 25-ம் தேதி துரைமுருகனுக்கு அவரின் அண்ணன் பாண்டியன் போன் செய்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து துரைமுருகனின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பொன்னேரி போலீஸார் துரைமுருகனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மனைவி இறந்த சோகத்தில் போலீஸ் ஏட்டு துரைமுருகன் தற்கொலை செய்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Most Popular

ஆன்லைனில் ரம்மி விளையாடிய காவலர் தூக்கிட்டு தற்கொலை!

ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய காவலர் ஆனந்த். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்....

காட்டுப் பகுதி… எல்லை மீறிய காதல் ஜோடி… வீடியோ எடுத்த கும்பல்!- கடைசியில் நடந்த பரிதாபம்

காட்டுப் பகுதியில் காதல் ஜோடி எல்லை மீறி கொண்டிருந்ததை வீடியோ எடுத்து கும்பல் ஒன்று அவர்களை மிரட்டி பணம், செல்போனை கொள்ளையடித்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார் தற்போது ஊரடங்கு...

கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 17 பேர் பலி !

கேரளாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம்  துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது...