சொந்த ரத்தத்தின் நிலைப்பாடே ஸ்டாலினை தோற்கடிக்கணும் என்பதுதான் – பொன்னையன்

 

சொந்த ரத்தத்தின் நிலைப்பாடே ஸ்டாலினை தோற்கடிக்கணும் என்பதுதான் – பொன்னையன்

சென்னை தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள்,மண்டல மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

சொந்த ரத்தத்தின் நிலைப்பாடே ஸ்டாலினை தோற்கடிக்கணும் என்பதுதான் – பொன்னையன்

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், “சொந்த ரத்தத்தின் நிலைப்பாடே ஸ்டாலினை தோற்கடிக்க வேண்டும் என இருக்கும் போது மக்களின் நிலைப்பாடும் அவ்வாறு தான் இருக்கும். ஸ்டாலினுக்கு எதிரான அலை அவர் குடும்பத்திலேயே உள்ளது.

எடப்பாடி பழனிசாமியை அனைத்து தொண்டர்களும் ஏற்று கொண்ட காரணத்தினால் தான் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்டாயம் 2021ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார். தொண்டர்களின் எண்ணமும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவதுதான். சசிகலாவின் வருகை அதிமுகவில் அணு அளவும் எந்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எம்.ஜி.ஆரை அனைவரும் உரிமை கொண்டாடுவது அதிமுக அபார செல்வாக்குடன் இருக்கிறது என்பதை காட்டுகிறது. புரட்சி தலைவர், புரட்சி தலைவியின் நிழலாக பழனிசாமி இருப்பதாக தொண்டர்கள் நினைக்கிறார்கள். அதனால் அவரை முதல்வர் வேட்பாளராக கழக தொண்டர்கள் வரவேற்கிறார்கள்” எனக் கூறினார்.