மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டார் “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தின் இயக்குநர்!

 

மாதர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டார் “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தின் இயக்குநர்!

அறிமுக இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில், நடிகை ஜோதிகா பொன்மகள் வந்தாள் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது.  இப்படத்தில் பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகிவரும் இப்படத்தில் ஜோதிகா வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. இப்படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்தநிலையில் ஊரடங்கு உத்தரவால் வெளியாகவில்லை. இதனிடையே இந்தப் படத்தை நேரடியாக அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் கோபமடைந்த திரையரங்கு உரிமையாளர்கள் இனி 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்தையும் திரையரங்குகளில் வெளியிடப்போவதில்லை என போர்கொடி உயர்த்தினர். பலரின் எதிர்ப்பையும் மீறி ஜோதிகா நடிப்பில் உருவாகி உள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் வரும் நேற்று ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குறித்த தவறான சித்தரிப்பு இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து இயக்குநர் ஜேஜே ஃப்ரெட்ரிக் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார். அதில், “AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம். இந்த திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களில் இருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன் பட்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.