நந்தி சொன்ன பொய்யால் உருவான மாட்டுப்பொங்கல்!

 

நந்தி சொன்ன பொய்யால் உருவான மாட்டுப்பொங்கல்!

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கலாகும். விவசாயத்தில் உழவர்களுக்கு பக்கபலமாக நின்ற கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகை பார்க்கப்படுகிறது.

கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்ததால் கர்வம் அழிந்த இந்திரனுக்காக திருமால் போகி கொண்டாடச் சொன்னார் என்பது போல மாட்டுப்பொங்கல் கொண்டாடப் படுவதற்கு காரணம் நந்தி என்றொரு புராணக் கதை இருக்கிறது.

கைலாசத்தில் ஒருநாள் நந்தியை அழைத்த சிவபெருமான், நீ பூமிக்குப் போய் அங்குள்ள மக்களிடம் தினந்தோறும் நன்றாக எண்ணெய் தேய்த்து குளியுங்கள். மாதத்தில் ஒருநாள் மட்டும் சாப்பிடுங்கள் என்று சொல்லி வர கூறினாராம். ஆனால் பூலோகத்துக்கு வந்த நந்தி குழப்பமடைந்தது. சிவபெருமான் கூறியதை மறந்துவிட்டது. பூமிக்கு வந்த நந்தி மக்களிடம், இனிமேல் எல்லோரும் மாதத்தில் ஒருநாள் மட்டும் குளியுங்கள், தினந்தோறும் நன்றாகச் சாப்பிடுங்கள் என்று தவறாக சொல்லிவிட்டு கைலாசத்துக்கு சென்றுவிட்டது.

நந்தி சொன்ன பொய்யால் உருவான மாட்டுப்பொங்கல்!

இதனால் கோபமடைந்த சிவ பெருமான், தினந்தோறும் சாப்பிடுவதென்றால் நிறைய உணவுப்பொருள் தேவைப்படும், மக்கள் சிரமப்படுவார்கள், அதனால், இதற்கு காரணமான நீயே பூமிக்குப் போய் அவர்களுக்கு வேளாண்மையில் உதவி செய் என சாபமிட்டாராம். அதைத்தொடர்ந்து பூமிக்கு வந்த நந்தி தன்னைப்போன்ற மாடுகளை உருவாக்கி ஏரில் உழுதும், பறம்படித்தும்,பொதி சுமந்தும் மக்களுக்கு உதவியதாம். அதன் பிறகு நந்தி தெய்வாம்சம் கொண்டது என்று புரிந்து கொண்ட மக்கள் தை முதல்நாள் அன்று சூரியனை வணங்குவது போல இரண்டாம் நாள், மாடுகளின் வடிவிலான நந்தியை வணங்க தொடங்கினர்.