பொங்கல் பரிசு ரூ.2,500 ஆயிரம்… நிதி சுமையில் வாக்கு வங்கியை சரிக்கட்ட பார்க்கிறதா அதிமுக அரசு?!

பொங்கல் பரிசு ரூ.2,500 ஆயிரம்… நிதி சுமையில் வாக்கு வங்கியை சரிக்கட்ட பார்க்கிறதா அதிமுக அரசு?!

தமிழகத்தில் பொங்கல் பரிசு 2,500 ரூபாய் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது எனலாம். ஆனால் அதே சமயம் தமிழக அரசுக்கு இது நிதி நெருக்கடியை மேலும் கூட்டும் ஒரு அறிவிப்பு என்று கருதுகிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.

பொங்கல் பரிசு ரூ.2,500 ஆயிரம்… நிதி சுமையில் வாக்கு வங்கியை சரிக்கட்ட பார்க்கிறதா அதிமுக அரசு?!

தமிழக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருவது பொங்கல் பரிசு.100 ரூபாய் என ஆரம்பித்த பொங்கல் பரிசு தற்போது 2 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளது. பொங்கல் பரிசில் 2,500 ரூபாய் ரொக்கம் மற்றும் அரிசி, வெல்லம், முழுக் கரும்பு போன்றவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசு ரூ.2,500 ஆயிரம்… நிதி சுமையில் வாக்கு வங்கியை சரிக்கட்ட பார்க்கிறதா அதிமுக அரசு?!

ஆனால் தமிழகத்தின் நிதி நிலைமை தற்போது மோசமான நிலையில் இருக்கிறது. தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் சுமை மட்டும் 4.5 லட்சம் கோடியாக உள்ள நிலையில் கொரோனா பரவல் செலவுகள், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பராமரிப்பு பணிகள் என அரசின் நிதி சுமை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. இந்த சூழலில் பொங்கல் பரிசினால் ஏற்படும் செலவு சுமார் 6 ஆயிரம் கோடியாக இருக்கும். அதேசமயம் ஒட்டுமொத்த செலவினங்களையும் கட்டுப்படுத்த ஒரே வழியாக பார்க்கப்படுவது டாஸ்மாக். டாஸ்மாக் வருவாய் மூலம் பொங்கல் செலவினத்தை சமாளிக்க முடியும் என்று கூறப்படும் நிலையில் இதன்மூலம் பணப்புழக்கமும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

பொங்கல் பரிசு ரூ.2,500 ஆயிரம்… நிதி சுமையில் வாக்கு வங்கியை சரிக்கட்ட பார்க்கிறதா அதிமுக அரசு?!

கொரோனா பேரிடர் காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு குடும்ப அட்டை வாயிலாக தலா 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தேர்தல் நெருங்கும் சூழலில் பொங்கல்பரிசு 2,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது வாக்கு வங்கிக்கான திட்டம் எனவும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ இது மக்கள் நலன் சார்ந்தது என்பதால் அதை ஏற்க வேண்டிய கட்டாயமும் இருக்கத்தான் செய்கிறது.