புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு : ஆளுநர் ஒப்புதல்!

 

புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு : ஆளுநர் ஒப்புதல்!

பொங்கல் பண்டிகையையொட்டி, புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசும் அரிசி, பருப்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதன் படி, நாளை முதல் மக்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்பட உள்ளது. இதனிடையே, புதுச்சேரி மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது, ஆளுநர் கிரண் பேடியின் பரிசீலனையில் இருந்தது.

புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு : ஆளுநர் ஒப்புதல்!

இந்த நிலையில், புதுச்சேரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் 1.75 லட்சம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,900 பொங்கல் பரிசாக வழங்க ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளித்துள்ளார். பொங்கல் பரிசு மக்களின் வங்கிக் கணக்கில் போட ரூ.3.49 கோடியை ஒதுக்கீடு செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதே போல, மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்க ரூ.54 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும், சிவப்பு அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுக்கு பதிலாக ரூ.200 வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளார்.