நெருங்கும் பொங்கல்… ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணி தீவிரம்…

 

நெருங்கும் பொங்கல்… ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணி தீவிரம்…

தேனி

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, சின்னமனூர் பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், தேனி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காளைகள் பங்கேற்று வருகின்றன.

நெருங்கும் பொங்கல்… ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணி தீவிரம்…

இந்த நிலையில், பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான திம்மரச நாயக்கனூர், குன்னூர், ஏத்தக்கோவில், டி.ராஜகோபாலன் பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வளர்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு, அதன் உரிமையாளர்கள் பிரத்யோக பயிற்சிகள் அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெருங்கும் பொங்கல்… ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் பணி தீவிரம்…

இந்த பகுதியில் காங்கேயம், தேனி மலைமாடு உள்பட 8 வகையான காளைகள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு மண் குவியலில் கொம்பு மூலம் முட்டவும், நீளமான கயிறுகளில் கட்டி முட்டவும், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய காளைகளின் உரிமையாளர்கள், தேனி மாவட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், பல்வேறு பரிசுகளை பெற்று உள்ளதாகவும், இந்த ஆண்டும் பரிசுகள் பெறும் வகையில் பயிற்சி அளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.