மக்களிடையே போட்டா போட்டி : பொங்கல் பரிசு டோக்கன் வழங்கல் நிறுத்தம்!

 

மக்களிடையே போட்டா போட்டி : பொங்கல் பரிசு டோக்கன் வழங்கல் நிறுத்தம்!

மதுரை அருகே மக்கள் மோதிக் கொண்டதால், பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் வழங்கும் பணி பாதிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பும் ரூ.1000 பணமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை அந்த பணத்தை ரூ.2,500 ஆக வழங்கப்போவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். மேலும், பொங்கல் பண்டிகைக்குள் பணம் வந்து சேரும் என்று தெரிவித்த அவர், ஜன.4 முதல் பணம் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். அதன் படி, பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் விநியோகம் இன்று முதல் தொடங்கியிருக்கிறது.

மக்களிடையே போட்டா போட்டி : பொங்கல் பரிசு டோக்கன் வழங்கல் நிறுத்தம்!

அந்தந்த பகுதிகளில் இருக்கும் ரேஷன் கடை ஊழியர்கள், வீட்டுக்கே நேரில் சென்று டோக்கன்களை விநியோகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை ஜம்புராபுரம் மார்க்கெட் பகுதியில் டோக்கன்களை பெற்றுக் கொள்ள மக்கள் மத்தியில் போட்டா போட்டி நிலவியுள்ளது. ஒருவருக்கு வழங்கப்பட்ட டோக்கன்களை மற்றொருவர் பறிக்க முயன்றதால் கடுப்பான ஊழியர்கள், பணியை பாதிலேயே நிறுத்தி விட்டு சென்றுள்ளனர்.