ஜன.12ம் தேதிக்குள் பொங்கல் பரிசு வழங்கப்படும் : அமைச்சர் செல்லூர் ராஜு

 

ஜன.12ம் தேதிக்குள் பொங்கல் பரிசு வழங்கப்படும் : அமைச்சர் செல்லூர் ராஜு

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை மக்கள் இனிமையாக கொண்டாட அரசு சார்பில், ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. இந்த முறை அந்த தொகையை உயர்த்தி ரூ.2,500 வழங்கப்போவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு இந்த பணம் வழங்கப்படுவதாக தெரிவித்த முதல்வர், இதற்கான அரசாணையும் வெளியிட்டார்.

ஜன.12ம் தேதிக்குள் பொங்கல் பரிசு வழங்கப்படும் : அமைச்சர் செல்லூர் ராஜு

அதில், ஜனவரி 4ம் தேதி முதல் பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படும் என்றும் இலங்கை தமிழர்களின் ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் குறிபிடப்பட்டிருந்தது. இதனிடையே, பொங்கல் பரிசை பெறுவதற்கான டோக்கன்கள் விநியோகம் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, ஜன.12ம் தேதிக்குள் மக்களுக்கு பொங்கல் பரிசு விநியோகம் செய்யப்படும் என்று கூறினார்.

மேலும், கைரேகையை வைத்து ரேஷன் கடைகளில் பொருள் வழங்குவதில் சர்வர் குறைபாடு இருப்பதாகவும்
கைரேகை வைக்காமல் பொருட்கள் வழங்குவது பற்றி முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.