பொங்கல் பரிசு திட்டம்: இன்று மாலை தொடக்கி வைக்கிறார் முதல்வர்!

 

பொங்கல் பரிசு திட்டம்: இன்று மாலை தொடக்கி வைக்கிறார் முதல்வர்!

ஆண்டுதோறும் பொங்கல் பரிசாக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 பணத்தை உயர்த்தி ரூ.2,500 ஆக வழங்கப்போவதாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். ஒரு துண்டு கரும்புக்கு பதிலாக ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்றும் அரிசி, சர்க்கரை, முந்திரி உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

பொங்கல் பரிசு திட்டம்: இன்று மாலை தொடக்கி வைக்கிறார் முதல்வர்!

அதன் படி, 2.10 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இலங்கை தமிழர்களின் ரேஷன் அட்டைகளுக்கும் , அரிசி அட்டைகளாக மாற்றம் செய்யக்கூடிய சர்க்கரை ரேஷன் அட்டைகளுக்கும் கூட பணம் வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறவிருக்கும் விழாவில் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைக்கிறார். ஜனவரி 4ம் தேதி முதல் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் கூறியிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.