கட்டுமான நல வாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம்

 

கட்டுமான நல வாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம்

தேனி

தேனி மாவட்டத்தில் கட்டுமான நல வாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

தமிழகம் முழுவதும் உள்ள கட்டுமான நல வாரிய உறுப்பினர்களுக்கு இன்று முதல் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது. இதனையொட்டி, தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன் பட்டியில் உள்ள நலவாரிய அலுவலகம், ஆண்டிபட்டி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்பட மாவட்டம் முழுவதும் 10 மையங்களில் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கட்டுமான பணியாளர்கள் கலந்துகொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட்களை பெற்றுச்சென்றனர்.

கட்டுமான நல வாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம்

இந்த பரிசு தொகுப்பினில் பச்சரிசி 2 கிலோ, வெல்லம் ஒரு கிலோ, சமையல் எண்ணெய் அரை லிட்டர், பாசி பருப்பு ஒரு கிலோ, ஆவின் நெய் 100 மில்லி, முந்திரி 25 கிராம், ஏலக்காய் 5 கிராம், உலர் திராட்சை 25 கிராம், தலா ஒரு வேஷ்டி, சேலை மற்றும் துண்டு இடம்பெற்று உள்ளது. இதன் மூலம் தேனி மாவட்ட கட்டுமான நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள சுமார் 27 ஆயிரத்து 765 தொழிலாளர்கள் பயனடைவர் என தெரிவித்துள்ள அதிகாரிகள், இன்று முதல் வரும் 13 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவித்தனர். மேலும், மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகளை கண்காணிக்க மேற்பார்வையார் ஆக உதவி ஆணையர் ஞானபிரசாத் குணசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.