‘பொங்கல் பண்டிகை’ : சென்னையில் கொண்டாட்டம் எப்படி இருக்கும்?

 

‘பொங்கல் பண்டிகை’ : சென்னையில் கொண்டாட்டம் எப்படி இருக்கும்?

தைத் திங்கள் முதல் நாள் பொங்கல் பண்டிகை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ‘பழையன கழிதல் புதியன புகுதல்’ என்பதிலிருந்து தொடங்கி, விவசாயத்தை செழிக்க வைக்கும் சூரியனை வணங்கவும், உழவுத் தொழிலுக்கு பேருதவி புரியும் மாடுகளை வணங்கவும், உற்றார் உறவினர்களை சந்தித்து மகிழவும் என தொடர்ந்து 4 நாட்கள் பொங்கல் பண்டிகை களைகட்டும். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, போட்டிகள், பரிசுகள் என கிராமங்கள் முழுவதிலும் கொண்டாட்டம் தான். தீபாவளி பண்டிகையை விட பொங்கல் பண்டிகைக்கு தான் கிராமங்களில் மவுசு அதிகம்.

‘பொங்கல் பண்டிகை’ : சென்னையில் கொண்டாட்டம் எப்படி இருக்கும்?

ஊர் முழுக்க கட்டிடங்களே நிறைந்திருக்கும் சென்னையை காட்டிலும், பச்சை பசேலென்று இயற்கை எழிலுடன் கூடிய கிராமங்களிலேயே மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட விரும்புவர். அதற்காகவே, சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவர்கள் எல்லாம் பொங்கல் விடுமுறை அறிவித்தவுடன், சொந்த ஊர்களுக்கு ஓட்டம் பிடித்து விடுவர்.

‘பொங்கல் பண்டிகை’ : சென்னையில் கொண்டாட்டம் எப்படி இருக்கும்?

சொந்த ஊர்களுக்கு செல்லாமல், இங்கேயே தங்கி இருப்பவர்களின் பாடு திண்டாட்டம் தான். உணவகங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு உணவுக்கே திண்டாட வேண்டிய சூழல் தான் சென்னையில் தங்கி இருக்கும் இளைஞர்களுக்கு ஏற்படும். இதற்கு பயந்து கொண்டே, பலர் சொந்த ஊர்களுக்கு சென்று விடுவது வழக்கம். இப்படியிருக்க, சென்னையில் பொங்கல் பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…

‘பொங்கல் பண்டிகை’ : சென்னையில் கொண்டாட்டம் எப்படி இருக்கும்?

மக்கள் அனைவரும் சொந்த ஊர்களை நோக்கிச் சென்று விட்டால் சென்னை வெறிச்சோடி விடும். இந்த சமயத்தில் சென்னையில் டிராஃபிக் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் “என்ன.. குக்கர் பொங்கலா?’ என்று கூறி கேலி செய்யும் அளவிற்கு இருக்கும் சென்னையின் பொங்கல் கொண்டாட்டம். உண்மையிலேயே அப்படி தான் இருக்குமா என்ன?

‘பொங்கல் பண்டிகை’ : சென்னையில் கொண்டாட்டம் எப்படி இருக்கும்?

பழையன கழிதலும் புதியன புகுதலும்: தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் அதிகாலையில் பழைய பொருட்கள் எரித்துக் கொண்டாடப்படுவதை போலவே, சென்னையிலும் மக்கள் போகியை கொண்டாடுவர். காலையில் வழக்கம் போல, பனிமூட்டத்துடன் சேர்ந்து புகை மூட்டமாக காணப்படும். உச்சியில் சூரியன் உதிக்கும் வரையில் அந்த புகை மூட்டம் போகாது என்றே சொல்லலாம்.

‘பொங்கல் பண்டிகை’ : சென்னையில் கொண்டாட்டம் எப்படி இருக்கும்?

பொங்கல் விழா; கிராமங்களில் மக்கள் காலையில் எழுந்து வண்ண வண்ணமாக கோலம் போடுவதை போலவே சென்னையிலும் மக்கள் கோலம் போட்டு வீடுகளை அலங்கரிப்பர். கிராமத்தில் சாணம், இங்கு சாணம் பவுடர். அவ்வளவு தான் வித்தியாசம். தேடிப்பிடித்தாவது வீடுகளில் மா இலை தோரணம் கட்டி, பூக்களால் அலங்கரித்து புது பானைகளில் பொங்கல் வைத்து அக்கம் பக்கத்தினருடன் இணைந்து கொண்டாடுவர். அலுவலகங்களிலோ, பணி புரியும் இடங்களிலோ முன்கூட்டியே பொங்கல் கொண்டாட்டம் வைத்து விட்டால் பல வீடுகளில் ‘குக்கர் பொங்கல்’ தான்.

‘பொங்கல் பண்டிகை’ : சென்னையில் கொண்டாட்டம் எப்படி இருக்கும்?

மாட்டுப் பொங்கல்: இந்த தினம் தான் கிராமங்களில் முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, சிறுவர்களுக்கு போட்டிகள் என அனைத்தும் மாட்டுப் பொங்கல் தினத்தன்றே நடத்தப்படும். அன்று தான் கிராமங்கள் களைகட்டும். ஆனால் சென்னையிலோ, கொண்டாட்டம் அனைத்தும் பொங்கல் தினத்தன்றே முடிந்து விடும். மாட்டுப் பொங்கலன்று சினிமா, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் என அப்படியே சென்று விடும்.

‘பொங்கல் பண்டிகை’ : சென்னையில் கொண்டாட்டம் எப்படி இருக்கும்?

காணும் பொங்கல்: இந்த தினம் சென்னையில் எங்கே பார்த்தாலும் கூட்டம் தான். அன்று சென்னையின் மெரினா, கிண்டி பூங்கா, வண்டலூர் பூங்கா, ஈசிஆர், மகாபலிபுரம் என எல்லா இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், இந்த முறை எல்லாம் பகல் கனவு தான். கொரோனாவால் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தமிழக அரசு தடை வித்திருக்கிறது. இதனால், மக்கள் கூட்டம் தியேட்டர்களிலும் பிரசித்தி பெற்ற கோவில்களிலும் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘பொங்கல் பண்டிகை’ : சென்னையில் கொண்டாட்டம் எப்படி இருக்கும்?

என்ன தான் கிராமங்கள் அளவிற்கு சென்னையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப் படுவதில்லை என்றாலும், நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க மாபெரும் போராட்டம் நடந்தது சென்னையில் தானே..!