விஜய்யின் பொங்கல் சென்டிமெண்ட் பிளாஃப் ஆனது ஏன்?

 

விஜய்யின் பொங்கல் சென்டிமெண்ட் பிளாஃப் ஆனது ஏன்?

பண்டிகை என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று களைகட்டும். புத்தாடை, இனிப்பு ,பலகாரம் வரிசையில் தவறாமல் ஒட்டிக்கொள்வது புது படங்களின் ரீலீஸ்.

ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் புது படங்கள் வெளியாவது என்பது கட்டாயமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. பண்டிகை தினங்களில் என்னதான் தொலைக்காட்சிகளில் படங்கள் ஒளிபரப்பப்பட்டாலும், புதுப்படங்களை தியேட்டரில் சென்று மக்கள் கூட்டத்திற்கு நடுவே கைதட்டி, கூச்சலிட்டு பார்க்கும் சுகமே தனிதான்.

விஜய்யின் பொங்கல் சென்டிமெண்ட் பிளாஃப் ஆனது ஏன்?

அப்படி தான் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல், தமிழ் புத்தாண்டு என செல்வது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது. மக்கள் கூட்டம் பண்டிகை நாட்களில் தியேட்டர்களில் கூடுவதை நம்மால் பார்க்க முடியும். குடும்பமாக மக்கள் கூட்டம் வரும்போதுதான் திரை உலகமும் பலம்பெறும். இதனால்தான் பெரிய ஹீரோக்களின் படங்கள் தீபாவளி , பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் வெளியிடப்படுகிறது. அதேசமயம் இந்த பண்டிகை ரேஸில் ஒரு குறிப்பிட்ட சில ஹீரோக்களின் படங்கள் மட்டுமே வெளியாகிறது. சின்ன படங்கள் இந்த பண்டிகை நாட்களில் வெளிவரும் போது அது நிச்சயம் மட்டுப்படுத்தப்படும். இருப்பினும் ஒருசில படங்கள் இந்த லாஜிக்கை உடைத்து வெற்றி பெற்றுள்ள கதையும் உள்ளது. அதற்கு உதாரணம் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது வெளியான பிகில் படத்தை காட்டிலும் சின்ன பட்ஜெட்டில் உருவான கைதி திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக விமர்சன ரீதியாகவும் அமைந்தது.

விஜய்யின் பொங்கல் சென்டிமெண்ட் பிளாஃப் ஆனது ஏன்?

இருப்பினும் கொரோனா எனும் பெருந்தொற்றால் மற்ற துறைகளை போல் திரையுலகமும் முடங்கியது. தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் மீண்டும் தியேட்டர்கள் கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது. இருப்பினும் புது படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை. காரணம் மக்கள் கொரோனாவால் தியேட்டருக்கு வர தயங்கினர்.

விஜய்யின் பொங்கல் சென்டிமெண்ட் பிளாஃப் ஆனது ஏன்?

இதற்கு எண்டு கார்டு போடும் விதமாக வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். கொரோனா அச்சத்தை மக்கள் மத்தியில் இருந்து நீக்கவும் , மீண்டும் திரையுலகிற்கு புத்துயிர் தரவும் வெளியான திரைப்படமாக எண்ட்ரி கொடுத்துள்ளது மாஸ்டர். ஒடிடி தளத்தில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட பல சூழல்கள் அமைந்த நிலையிலும் மக்களின் வரவேற்பு மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் நன்மையைக் கருதி மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கொரோனா நெறிமுறைகளுடன் 50 சதவீத இருக்கைகளுடன் வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை காண விஜய் ரசிகர்கள் நீ.. நான் என்று போட்டி போட்டு பார்த்து வருகின்றனர்.

விஜய்யின் பொங்கல் சென்டிமெண்ட் பிளாஃப் ஆனது ஏன்?

இருப்பினும் விஜய்யின் மற்ற படங்களுக்கு கிடைத்த வரவேற்பு மாஸ்டர் படத்திற்கு கிடைத்துள்ளதா? என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். காரணம் விஜய்யின் படங்களான ஜில்லா,நண்பன் , காவலன், போக்கிரி உள்ளிட்ட திரைப்படங்கள் கடந்த ஆண்டுகளில் கொண்டாடப்பட்ட பொங்கல் நாளில் தான் வெளியாகின. இந்த படங்கள் ஹிட்டோ, சுமாரோ இருப்பினும் இவற்றிக்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் மாஸ்டர் படத்திற்கு கிடைக்கவில்லை. காரணம் கொரோனா அச்சத்தில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராதது தான். அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிக அளவு இருந்ததை போல படத்திற்கு கெட்ட நேரமும் அதிகமாகவே இருந்தது. படம் வெளியாக இருந்த 15 நாட்களில் திடீர் ஊரடங்கு, புதுப்படங்கள் ரிலீஸுக்கு அனுமதி இல்லை, 50% இருக்கைக்கு அனுமதி, பின்னர் 100% இருக்கைக்கு அனுமதி என பல குளறுபடிகள் மாஸ்டர் பட ரிலீஸுக்கு தடையாக இருந்தது.

விஜய்யின் பொங்கல் சென்டிமெண்ட் பிளாஃப் ஆனது ஏன்?

இதையெல்லாம் தாண்டி படம் வெளியாகி இருப்பது எந்த விஜய் படத்திற்கும் கிடைக்காத நெருக்கடி தான். சில விஜய் படங்களுக்கு அரசியல் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது எல்லோரும் அறிந்த ஒன்று தான். ஆனால் இந்த முறை சலசலப்பே இல்லாமல் படத்தை ரிலீஸ் செய்து விடாமல் என்று கனவு கோட்டையை கட்டிய விஜய்க்கு கிடைத்தது என்னவோ பெரிய சறுக்கல் தான்.

இருப்பினும் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் ரசிகர்களுக்கு மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் பெரிய விருந்தே கிடைத்துள்ளது. மொத்ததில் மாஸ்டர் திரைப்படம் கொரோனா காலத்தில் முடங்கி கிடைக்கும் தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாகவும், திரை ரசிகர்களை மீண்டும் ஒன்று கூட வைக்கும் தளமாகவே அமைந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.