“கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு” – பொன்.ரா

 

“கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு” – பொன்.ரா

2019ஆம் ஆண்டு மக்களைவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியடைந்தார். கொரோனா கொண்டுபோன தலைவர்களில் வசந்தகுமாரும் ஒருவர். இதனால் அத்தொகுதி காலியனாதாக அறிவிக்கப்பட்டது. ஆகையால் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலோடு அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

“கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு” – பொன்.ரா

இதற்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் விருப்ப மனு கொடுத்துள்ளார். அதேபோல பிரியங்கா காந்தி போட்டியிட கார்த்தி சிதம்பரம் மனு கொடுத்திருக்கிறார். ஆனால் பாஜக நேராகவே வேட்பாளரை அறிவித்துவிட்டது. வழக்கம்போல பொன்.ராதாகிருஷ்ணனையே வேட்பாளராக முன்னிறுத்தியிருக்கிறது. இதுதொடர்பாகப் பேசிய அவர், “என்னை வேட்பாளராக்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக பாஜக தலைவர் முருகன், பாஜக செயலாளர் சந்தோஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

“கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு” – பொன்.ரா

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் புதிய ஒரு சரித்திரத்தை எழுத உள்ளார்கள் என்று நம்புகிறேன். என்னுடைய மனச்சாட்சிக்கு துரோகம் செய்யாமல் இதுவரை பணியாற்றியுள்ளேன். மீண்டும் அதுபோல பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார். அப்போது இடைமறித்த செய்தியாளர்கள், பிரியங்கா காந்தி போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் தரப்பிலிருந்து கூறப்படுகிறதே என்றனர்.

“கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வு” – பொன்.ரா

அதற்கு அவர், “கார்த்தி சிதம்பரத்துக்கு காங்கிரஸ் தலைமை மீது ஏதோ வன்மம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவுக்கு பெரிய வெற்றி வாய்ப்பு இருக்கிறது. தேவையில்லாமல் பிரியங்கா காந்தியை நிறுத்தி தோல்வியடைய வைக்கப் போகிறார்” என்றார். பிரியங்கா காந்தி தன்னை எதிர்த்து நின்றால் தான் போட்டியில்லாமலேயே வெற்றிபெறுவேன் என்பதே இதனுடைய உட்பொருள். அப்போ விஜய் வசந்த் நின்னா?