பெரியார் கூட விபூதியை வைத்துக்கொண்டார்; ஆனால் ஸ்டாலினோ அவமதிப்பு செய்துள்ளார்- பொன். ராதா

 

பெரியார் கூட விபூதியை வைத்துக்கொண்டார்; ஆனால் ஸ்டாலினோ அவமதிப்பு செய்துள்ளார்- பொன். ராதா

தேவர் ஜெயந்தியையொட்டில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த சென்ற ஸ்டாலினுக்கு எதிராக கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கினர். தற்போது மீண்டும் ஒரு பிரச்னை கிளம்பியுள்ளது. அதாவது ஸ்டாலினுக்கு அங்கு விபூதி அளிக்கப்பட்டது. அதை நெற்றியில் ஸ்டாலின் பூசாமல் பெயரளவில் கழுத்தில் தடவிக் கொண்ட அவர், மீதமிருந்த விபூதியை கீழே கொட்டிவிட்டதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் விபூதியை கீழே கொட்டும் வீடியோவையும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தேவரை அவமதித்த ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன.

பெரியார் கூட விபூதியை வைத்துக்கொண்டார்; ஆனால் ஸ்டாலினோ அவமதிப்பு செய்துள்ளார்- பொன். ராதா

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “தேவர் நினைவிடம் என்பது ஆலயம் போன்றது. அந்த இடத்தில் நடந்த சம்பவம் அதீர்ச்சியையும் வேதனையையும் அளித்துள்ளது. தெய்வீக வழிபாட்டில் நம்பிக்கை உள்ளதோ இல்லையோ எந்த தலைவரும் அவமரியாதையாக நடந்தது இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் வழங்கப்பட்ட விபூதியை சர்வ சாதாரணமாக கீழே கொட்டுகிற காட்சி வெளியாகி உள்ளது. ஸ்டாலின் இறைவழிபாட்டில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஸ்டாலின் ஸ்ரீரங்கத்திலும் குங்குமத்தை உதாசீனப்படுத்தினார். விருப்பம் இல்லை என்றால் வழிபாடு செய்து விட்டு வந்திருக்கலாம். ஆனால் உதாசீனப்படுத்திவிட்டர்.

பெரியார் கூட அடிகளார் வழங்கிய திருநீறை மரியாதை நிமித்தமாக அணிந்து கொண்டார். ஆனால் ஸ்டாலின் பசும்பொன்னில் நிகழ்த்திய சம்பவம் மனதிற்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஸ்டாலின் மன்னிப்புக்கேட்பார் என நம்புகிறேன். அது ஒரு கொடுமை எனக்கூறுவேன். அது இனி நிகழாத வண்ணம் மற்ற தலைவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.