விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மோடியின் இலக்கு- பொன். ராதா

 

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மோடியின் இலக்கு- பொன். ராதா

திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், “ நமது நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகள் மேம்பாட்டிற்காக பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் அவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருகிறார், தன்னுடைய அரசு ஏழை, எளியோருக்கான அரசு, விவசாயிகளுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட அரசு என பொறுப்பேற்ற முதல் நாளிலே தெளிவாக பறைசாற்றினார், விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை தொடர்ந்து அளித்து வருகிறார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதே மோடியின் இலக்கு- பொன். ராதா

பிரதமர் மோடியின் இலக்கு 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது. இதற்கு தடையாக உள்ளதை அகற்ற வேண்டிய வேண்டிய கட்டாய சூழல் நமது நாட்டில் இருப்பதை அறிந்து தான் புதிய சட்டங்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி உள்ளார். இவையெல்லாம் விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் அம்சங்கள், விளைவித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போகும் அவல நிலை விவசாயிகளுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம். பெரும்பான்மை விவசாயிகளால் இத்திட்டம் வரவேற்கப்படுகிறது. துரதிருஷ்டவசமாக அரசியல் பிழைப்புக்காகவும், அரசியல் லாபத்திற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக போன்ற கட்சிகள் இதை எதிர்க்கின்றனர், ஆனால் கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இதே சட்டத்தை தேர்தல் அறிக்கையில் கூறி இருக்கின்றனர், ஆனால் இப்போது போராட்டம் நடத்துகின்றனர்,

திமுகவும் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இதனை கூறியிருக்கின்றனர், எனவே சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஸ்டாலின் போன்றோர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், அவர்கள் கேட்பார்களா?” என கேள்வி எழுப்பினார்