கமலுடன் ரஜினி கூட்டணியா? தேர்தல் நேரத்தில் யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதை பாருங்கள்- பொன். ராதா

 

கமலுடன் ரஜினி கூட்டணியா? தேர்தல் நேரத்தில் யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதை பாருங்கள்- பொன். ராதா

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன், “நாட்டின் முதுகெழும்பான விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு அடையவும் விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்திற்காகவும் பல திட்டங்கள் பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்டு உள்ளன. விவசாயிகளின் விளைபொருட்களுக்களை சந்தைபடுத்தும் போது விவசாயிகள் ஏமாற்றபடுவது, நஷ்டபடுவது உள்ளிட்ட பிரச்சனைகளுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த சட்டத்தை பாஜக மட்டும் சொல்லவில்லை, 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியும் அதேபோல திமுகவும் இதே சட்டத்தை பற்றி சொன்னார்கள் ஆனால் அவர்கள் அதனை நிறைவேற்றவில்லை.

இடைதரகர்களை ஒழிக்கவேண்டும், அவர்கள் விரும்பும் தொகையை அவர்கள் பொருட்ளுக்கு கிடைக்க எற்பாடு செய்யவேண்டும். விவசாயம் செய்யும் முன்பே அவர்கள் பொருட்ளுக்கான விலையை உருவாக்குவது இந்த சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நலன் கருதியே கொண்டுவரப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள். விவசாயிகளுக்கும் எதிர்கட்சிகளுக்கும் இந்த சட்டம் குறித்து விளக்கமளித்தாலும் அதனை ஏற்க மறுக்கிறார்கள்.

கமலுடன் ரஜினி கூட்டணியா? தேர்தல் நேரத்தில் யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதை பாருங்கள்- பொன். ராதா

எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என மாநிலத்தில் திமுகவும் மத்தியில் காங்கிரஸ் கட்சியும் செயல்படுகிறது. தூங்குபவர்களை எழுப்பிவிடலாம் தூங்குவதை போல நடிப்பவர்களை எழுப்பமுடியாது. திமுகவும், காங்கிரஸ் கட்சியும் இந்த சட்டத்தை கொண்டுவர நினைத்தார்கள். நாம் செய்யவேண்டும் என்ற திட்டத்தை பாஜக கொண்டுவந்து பிரதமர் பெயரெடுத்துவிட்டாரே என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகிறது. தமிழகம் முழுதும் இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 1000 கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

கிராமங்களை ஒழிக்க திமுக சார்பில் கிராம சபைகூட்டங்கள் நடத்தபட உள்ளது. ஆட்சியில் இருக்கும் போது கிராமங்களை கண்டுகொள்ளாத திமுகவிற்கு, 50 ஆண்டுகளுக்கு பின்னர் கிராமங்கள் குறித்து படிக்கவாய்ப்பு கிடைத்துள்ளது. விவசாயிகளையும் கிராமத்தையும் பற்றி பேச திமுகவிற்கு எந்த யோக்கியதையும் இல்லை. ரஜினி கமல் கூட்டணி அமைத்தால் வாழ்த்துக்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். கட்சியின் கிளை தலைவருக்கு இருக்கும் அறிவு, ஞானம், பக்குவம் கூட இல்லாதவர் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி” என விமர்சித்தார்.