காங்கிரஸால் ஊழல் மிகுந்த ஆட்சியை மட்டும் தான் தரமுடியும்: பொன். ராதாகிருஷ்ணன்

 

காங்கிரஸால் ஊழல் மிகுந்த ஆட்சியை மட்டும் தான் தரமுடியும்: பொன். ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வந்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை-புதுச்சேரிக்கு இடையே நீர்வழி போக்குவரத்து துவங்கவுள்ளது என்றும் இது தனது கனவு திட்டம் என்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியுள்ளதை வரவேற்கிறேன். இதேபோல் சென்னை-கன்னியாகுமரிக்கு இடையேயும் நீர்வழி போக்குவரத்து தயாராக உள்ளது, கிழக்கு கடற்கரை சாலை திட்டத்தை விரைந்து முடிக்கவுள்ளது. இத்திட்டங்கள் இரண்டும் தமிழகத்திற்கு வளர்ச்சியை அளிக்ககூடிய திட்டங்களாகும்.

காங்கிரஸால் ஊழல் மிகுந்த ஆட்சியை மட்டும் தான் தரமுடியும்: பொன். ராதாகிருஷ்ணன்

அதுமட்டுமல்லாது சென்னை-கன்னியாகுமரிக்கு இடையே கிழக்கு கடற்கரை ரயில்வே பாதை அமைக்க வேண்டும். இது தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவும். பாரத பிரதமர் மோடி அரசு இத்திட்டங்களை செயல்படுத்த முனைப்பாக உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. திமுகவிற்கு அரசியல் செய்ய வேறு வழியில்லாமல் பிரதமர் மோடி திட்டங்களை எதிர்த்து வருகின்றனர். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் அழைத்த போது, அவர்களை பேச்சு வார்த்தைக்கு செல்லவிடாமல் ராகுல்காந்தி தடுத்து வருகிறார். விளைபொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நியாயமான விலையில் விவசாயிகள் விற்பனை செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். இதுபோல் இயற்கை சீற்றம், பேரிடர்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படும் விவசாயிகளின் இழப்புகளை சரிசெய்ய காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.

மோடியின் இலக்கு, விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்பதே, ஆனால் காங்கிரசார் ஆட்சி அமைக்க என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளனர். ராகுல் சிறந்த தலைவராக இருந்திருந்தால் அரசு பேச்சுவார்த்தைக்கு விவசாயிகளை செல்ல அனுமதித்து இருக்க வேண்டும். இவர்களால் ஊழல் மிகுந்த ஆட்சி மட்டும் தான் கொண்டு வர முடியும். சில சூழல் காரணமாகவே சீன பொருட்கள் நம் நாட்டில் விற்பனைக்கு வருகிறது. மோடி அரசியல் சாதுர்யமும், நாட்டின் மேல் அக்கறையும் மிக்கவர்” எனக் கூறினார்.